தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக தமது தேவைகளை ஒரு குழுவாக ஆராய்ந்து ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என விஞ்ஞான அலுவல்கள் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார்.
அமரத்துவம் அடைந்த இலங்கையின் புகழ்பூத்த கலைஞர்களை நினைவு கூரும் நோக்கில் நேற்று முன்தினம் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய அவர், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஆராயும் உபகுழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்களும், தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவரும் அடங்குகின்றனர்.
இவ் உறுப்பினர்கள் ஒன்றிணை ந்து தமிழ் மக்களின் பிரச்சினைகள், அரசியல் தேவைகள் போன்ற வற்றை ஆராய்ந்து ஜனாதிபதி அவர் களிடம் கையளிக்க வேண்டும்.
ஜனாதிபதி அவர்கள் அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடி யும்.
மாகாண மட்டத்திலும் கிராமிய மட்டத்திலும் மக்கள் சபை உரு வாக்கப்பட்டு அவற்றுக்குரிய நிர் வாகம், அதிகாரம், நிதி வசதிகள் போன்றவை வழங்கப்படும். இதற் குரிய திட்டங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நடைமுறைப்படு த்தப்படும் என்றார்.
இந்நிகழ்வை, கலைஞான கேசரி எஸ்.கே. தங்க வடிவேல் ஒருங்கி ணைத்திருந்தார்.
வழக்கறிஞர் கே. பத்மநாதன் தலைமை தாங்கியிருந்ததுடன், பிர தம விருந்தினராக கிழக்கு மாகாண மக்கள் வங்கியின் முன்னாள் உதவிப் பொது முகாமையாளர் ரகு துரை சிங்கமும், கெளரவ விருந்தினராக கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் மு. கதிர்காமநாதனும் சிறப்பு விருந்தினராக வானொலி நாடகத் தந்தை அமரர் சானாவின் புதல்வி திருமதி சுமதி பாலஸ்ரீதரனம் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வில் செல்வி துலக்ஷிகாவின் பக்திப் பாடல்களும் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவர்களின் பட்டிமன்றமும் நடைபெற்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக