சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் திட்டம் 14 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 2011 முதல் 2013 வரை செயற்படுத்தப்படும்
ஐ. நா. அபிவிருத்தித் திட்டம் இதற்கு உதவவுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை புனர்வாழ்வு சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர். டி. யு. குணசேகர சமர்ப்பித்திருந்தார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த 12 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி 5ஆயிரம் பேர் வரை புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர்.
ஏனையவர்களை புனர்வாழ்வளித்து சமூக மயப்படுத்துவதற்காக வடக்கு கிழக்கில் புதிதாக புனர்வாழ்வு நிலையங்களை அமைக்கவும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகமயப் படுத்தப்பட முன் கல்வி, தொழிற் பயிற்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவு வழங்கப்படும்.
இந்தத் திட்டத்திற்கு நிதிஉதவி வழங்க ஐ.நா. அபிவிருத்தித் திட்டம் முன்வந் துள்ளது. இது தொடர்பான அடுத்த கட்ட திட்டங்களை முன்னெடுக்கும் அதிகாரம் புனர்வாழ்வு சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சிற்கு வழங்கப் பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக