29 அக்டோபர், 2010

சொல்ஹெய்ம் புலிகளின் நண்பர்:சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி

போர்நிறுத்த உடன்படிக்கையின் அனைத்துப் பிரிவுகளும் புலிகளை பலப்படுத்துவதாகவே அமைந்திருந்தன. போர்நிறுத்த உடன்படிக்கை செயற்பாட்டில் நோர்வேயை பங்கெடுக்க வைப்பதற்கு அப்போது எடுக்கப்பட்ட தீர்மானம் மிகவும் தவறானது. ஆசியாவின் எண்ணக்கருவை நோர்வேயினால் புரிந்துகொள்ள முடியாது. மேலும் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் புலிகளின் நண்பராகவே செயற்பட்டார் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்று நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பற்றி பேசும் நோர்வே இவ்வாறு செயற்படுவதா? போர்நிறுத்த உடன்படிக்கை செயற்பாட்டில் நேர்வேயை பங்கெடுக்க வைப்பதற்கு அப்போது எடுக்கப்பட்ட தீர்மானம் மிகவும் தவறானது. ஆசியாவின் எண்ணக்கருவை நோர்வேயினால் புரிந்துகொள்ள முடியாது. சிங்கள தமிழ் மக்களின் எண்ணங்களை நோர்வேயினால் புரிந்துகொள்ள முடியவில்லை. மேலும் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் புலிகளின் நண்பராகவே செயற்பட்டார். புலிகள் தவறு செய்கின்றனர் என்பதனை பவர் என்பவர் உணர்ந்தார். ஆனால் எரிக் சொல்ஹெய்ம் அவ்வாறு இல்லை. எத்தியோப்பியா இஸ்ரேல் விடயங்களில் நோர்வே புறந்தள்ளப்பட்டது. நேபாளத்துக்கு அனுமதிக்கப்படவுமில்லை. ஆனால் இன்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி மட்டத்தில் நோர்வேயுடன் தொடர்புகள் பேணப்படுவதாக தெரிகின்றது.

அரச சேவை சுயாதீனமாதாக இயங்கவேண்டும். அரச ஊழியர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றவேண்டும். அந்த வகையில் 18 ஆவது திருத்தச் சட்டம் சிறந்தது. காரணம் அனைத்து விடயங்களும் இறுதியாக ஜனாதிபதியிடம் செல்கின்றது. எனவே மக்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியை நோக்கி விரல் நீட்டும் நிலைமை வரலாம். அதாவது அவர் பொறுப்புள்ளவராக இருக்கின்றார். இதேவேளை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட படையினர் தொடர்பிலும் கவனம்செலுத்தப்பட்டு நட்டஈடுகள் வழங்கப்படுவது அவசியமாகும். அவர்களின் பிள்ளைகள் பற்றியாவது சிந்திக்கவேண்டும். புலிகளினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் நட்டஈடுகள் அவசியமாகும். என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக