29 அக்டோபர், 2010

புலிகள் மீதான தடை குறித்த அடுத்தகட்ட விசாரணை டில்லியில்!



விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்த அடுத்தகட்ட விசாரணை டில்லியில் நடைபெறும் என்று பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்த விசாரணையை பயங்கரவாத மேற்படி நீதிமன்றம் நடத்தி வருகிறது. சென்னையில் நேற்று நடந்த இந்த விசாரணையில் வைகோ, பழ.நெடுமாறன், சுப்பிரமணியசாமி ஆகியோர் ஆஜரானார்கள்.

அரசுத் தரப்பில், சிவகங்கை மாவட்ட கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், கும்பகோணம் டிஎஸ்பி இளங்கோவன், தூத்துக்குடி கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சென்னை துணைக் கண்காணிப்பாளர் முகமது அஸ்ரப், திண்டுக்கல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல் ஆகியோர் ஆஜராயினர்.

அவர்களை வைகோ குறுக்கு விசாரணை செய்தார்.

இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனிடம், வைகோ,

"சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் பிரிவு 10(ஏ) (1)இன் கீழ் யார் மீதாவது வழக்கு பதிவு செய்தீர்களா?"

சந்திரசேகரன்,

"எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை"

நீதிபதி,

“விடுதலைப் புலிகள் அமைப்பு இருக்கிறதா, அழிக்கப்பட்டு விட்டதா?" என்று கேட்டார்.

அதற்கு வைகோ,

"அவர்களை எக்காலத்திலும் முற்றிலும் அழிக்க முடியாது, அவர்களின் லட்சியத்தை அவர்கள் வெல்வார்கள். இந்தியாவில் அவர்களின் அமைப்பு இல்லை." என்றார்.

வாதங்களைக் கேட்ட நீதிபதி, அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் முதலாந்திகதி புதுடில்லியில் நடைபெறும் என்று தெரிவித்து, விசாரணையை ஒத்தி வைத்தார்.

விசாரணையின்போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சிவநேசன் என்பவர், தமது கருத்தையும் கேட்க வேண்டும் என்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான தீர்ப்பும் ஒத்தி வைக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக