29 அக்டோபர், 2010

பல்கலைக்கழக அமைதியற்ற சூழல்; கடும் நடவடிக்கை எடுக்க அரசு முடிவு


பல்கலைக்கழக கட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழல் தொடர்பாக அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தினுள் விரும்பத் தகாத சில நிகழ்வுகள் நடைபெறுகின்றன. எந்த ஆசிரியரும் தனது மாணவனால் தாக்கப்படுவதை அச்சுறுத்தப்படுவதை விரும்புவதில்லை. இதே போன்று எந்தப் பெற்றோரும் தனது பிள்ளைகள் இவ்வாறு இருக்க வேண்டும் என விரும்புவதில்லை.

பெற்றோர் இன்று கண்ணீர் விடுகின்றனர். குறிப்பிட்ட ஒரு தொகை மாணவர்களின் செயலினால் முழுமையான பல்கலைக்கழக கட்டமைப்பும் சீரழியும் நிலை உருவாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டாது என்றும் அமைச்சர் கெஹெலிய தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சிலரால் தாக்கப்பட்டமை தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

மாணவர் தாக்கப்பட்டாராயின் அது தொடர்பாக முறையிடலாம். அல்லது அதற்கான சட்ட ரீதியான நடைமுறைகள் பின்பற்றலாம் என்றும் அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக