இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்ய முயற்சி செய்த பிரதான குற்றவாளி என இனங்காணப்பட்டவருக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த சம்பவத்தின் போது மேற் கொள்ளப்பட்டதாக கூறப்படும் 28 குற் றச்சாட்டுகளுடன் தொடர்பு கொண்டமையை ஏற்றுக்கொண்ட வவுனியா நாவற்குளத்தைச் சேர்ந்த சத்திவேல் இலங்கேஸ்வரன் என்பவருக்கே 30 வருட கடூழியச் சிறைத் தண்டனையை மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ. ரி.எம்.பி.டி. வராவெள, வழங்கினார்.
சம்பவத்தின் போது தற்கொலைக் குண்டு வெடிப்பினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு மரணம் சம்பவித்திருக்குமானால் ஜனாதிபதித் தேர்தல் இடைநிறுத்தப் பட்டிருக்கும். இதனால் தேர்தல் திணைக்களத்திற்கு சுமார் ஆறு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டிருக்கும் என நீதி பதி தமது தீர்ப்பின் போது குறிப்பிட்டார்.
அத்துடன், கொலை முயற்சியின் போது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியிருக்க கூடிய நிலையிலிருந்த போதும் குண்டை வெடிக்கவைத்து பல உயிர்களை காவுகொள்ள செய்தமையைக் கொண்டே குற்றவாளிக்கு இந்த தண்ட னையை வழங்குவதாக நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக