21 ஆகஸ்ட், 2010

ரூ. 7 கோடி 54 இலட்சத்து 78,000: குறை நிரப்பு சபையில் சமர்ப்பிப்பு

7 கோடி 54 இலட்சத்து 78, 037 ரூபா வுக்கான குறை நிரப்புப் பிரேரணை யொன்றை ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று சபையில் சமர்ப்பித்தார். இதில் அமைச்சர்கள், சுங்கம் என்பவற்றுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக மாத்திரம் 6 கோடி 8 இலட்சத்து 9900 ரூபா ஒதுக் கப்பட்டுள்ளது.

தபால் தொலைத் தொடர்பு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சருக்கு 3 வாகனங் களையும், பெருந்தோட்டக் கைத்தொழில் பிரதி அமைச்சர், உள்ளூராட்சி மாகாண சபைகள் பிரதி அமைச்சர், கால்நடை வளர்ப்பு அமைச்சர், சமூக சேவைகள் அமைச்சர், பெற்றோலிய தொழிற்துறை பிரதி அமைச்சர், சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர், ஆகியோருக்கு தலா ஒரு வாகனத்தை கொள்வனவு செய்வதற்காகவும் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதி திட்டமிடல் அமைச்சின் ஆலோச னைக் குழுக் கூட்டத்துக்கு சமர்ப்பிக்கும் வகையில் இந்த தகவல்கள் பாராளுமன் றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த குறைநிரப்பு ஒதுக்கீட்டுக்கு ஜே.வி.பி. எம்.பி. அநுரகுமார திசாநாயக்க எதிர்ப்புத் தெரிவித்தார். இதனை விவாதத்துக்குட்படுத்த முடியாது என்று கூறிய அமைச்சர் தினேஷ் குணவர்தன தேவையானால் இது குறி த்து விவாதமொன்றை கோர முடியும் என்று தெரிவித்தார். கட்சித் தலைவர் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்க முடியும் என சபாநாயகர் அறிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக