அமெரிக்காவில் உத்தா மாகாணத்தை சேர்ந்தவர் ரோன்னி லீ கார்ட்னர் (49). இவர் கடந்த 1985-ம் ஆண்டு 2 பேரை கொலை செய்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் அவரது தண்டனை உறுதி செய்யப்பட்டது. எனவே உத்தா சிறையில் நேற்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
5 பேர் கொண்ட குழுவினர் நெஞ்சில் துப்பாக்கி யால் சுட்டு அவரை கொன்றனர். முன்னதாக அவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலை யில் நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார். அவரது முகத்தில் கருப்பு துணியால் மூடி இந்த தண்டனை நிறை வேற்றப்பட்டது.
சமீப காலமாக அமெரிக்க சிறைகளில் மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந் தது. 14 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றுதான் ரோன்னி லீ கார்ட்னருக்கு இந்த தண்டனை நிறைவேறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக