20 ஜனவரி, 2010


12 இலட்சம் வாக்குகளால் ஜனாதிபதி முன்னணியில்
உள்நாட்டுஇ வெளிநாட்டு கருத்து கணிப்பில் தகவல்



உள்நாட்டுஇ வெளிநாட்டு சில அமைப்புக்கள் நடத்திய கருத்துக் கணிப்பின் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 12 இலட்சம் வாக்குகளால் முன்னணியில் இருப்பதாக பொறியியல் சேவைகள் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி 27 ஆம் திகதி 15 சதவீத மேலதிக வாக்குகளால் வெற்றி பெறு வது உறுதி என்று அவர் மேலும் தெரிவித்தார். மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்: தேசிய பிரச்சினைக்கும்இ பொருளா தாரத்திற்கும் உரிய தீர்வு முன்வைக்க முடியாத சரத் பொன்சேகாவினால் எதனையும் செய்ய முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நகர்ப்புறங்களையும்இ கிராமப் புறங்களையும் சேர்ந்த பெருந்தொகையானோர் ஜனாதிபதிக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். சரத் பொன்சேகாவும்இ அவரை ஆதரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிஇ மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் எந்தவொரு குறிக்கோளும் இல்லாமல் நாளுக்கு நாள் குழப்பத்தில் மூழ்கியுள்ளன.

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து முற்றிலும் அறியாமை முறைமையே சரத் பொன்சேகாவிடம் காண முடிகின்றது.

1977ல் எட்டு இறாத்தல் தானியம் தருவதாக ஜே. ஆர். அன்று மக்களை ஏமாற்றினார். இன்றைய மக்கள் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்பவர்கள். எனவே அவ்வாறு இலகுவாக ஏமாற்ற முடியாது.

ஐ.தே.க.இ ஜே.வி.பியை நம்ப முடியாத நிலையிலுள்ள சரத் பொன்சேகா இராணுவத்தைச் சேர்ந்த தனது நண்பர்களை தேர்தல் தொகுதி இணைப்பாளர்களாக நியமித்துள்ளார். இது பொன்சோகாவுக்கும் ஜே.வி.பி.இ ஐ.தே.க. உறவுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை காணப்படுகின்றது.

இதனால் அந்த பிரதேச அமைப்பாள ர்களும் ஆதரவாளர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் எதுவும் கிழக்கில் மேற்கொள்ளப்படவில்லை
சம்பந்தன் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்கிறார் கிழக்கு ஆளுநர்



கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.

சம்பந்தன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை கிழக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் மொஹான் விஜேவிக்கிரம முழுமையாக நிராகரித்தார். அரசியல் லாபம் பெறுவதற்காக இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் பரப்பி வருவதாகவும் தமிழ்இ முஸ்லிம் மக்களின் காணிகளில் வேறு எவரும் குடியேற்றப்படமாட்டார்கள் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கிழக்கு மாகாணத்தில் முற்றிலும் பெரும்பான்மையினரிடம் பறிபோகும் எனவும் அம்பாறை - அரந்தலாவை முதல் மட்டக்களப்பு வரை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுவதாகவும் மட்டக்களப்பில் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது அரசியல் லாபம் கருதி மக்களைத் திசை திருப்புவதற்காகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டாகும். இதில் எதுவித உண்மையும் கிடையாது.

போர்ச் சூழல் காரணமாக கிழக்கில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர். இவர்கள் அரச அதிபர்கள்இ பிரதேச செயலாளர்களின் புள்ளி விபரங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படு கின்றனர். இந்தச் செயற்பாட்டில் எதுவித அரசியல் தலையீடும் கிடையாது.

இதற்கு முன்னரும் சம்பந்தன் எம். பி. இவ்வாறு சிங்களக் குடியேற்றம் குறித்து குற்றஞ் சுமத்தியிருந்தார். அவரின் தலையீட்டினால் வேறு நபர்களின் இடங்களில் முறைகேடான மீள்குடியேற்றங் கள் இடம்பெற்றுள்ளன.

வேறு பகுதிகளில் இருந்து சிங்கள மக்கள் அழைத்து வரப் பட்டு கிழக்கிலுள்ள தமிழ்இ முஸ்லிம் மக்களின் காணிகளில் ஒருபோதும் குடியேற்றப்படவில்லை. 20 வருடங்களுக்கு முன்னர் வெளியேறிய மக்களும் இன்று தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

1981 இல் திருகோணமலையில் அதிகமான சிங்கள மக்கள் தமிழ்இ முஸ்லிம் மக்களுடன் இணைந்து ஒற்றுமையாக வாழ்ந்தனர். போர்ச் சூழல் காரணமாக இடம் பெயர்ந்து சிங்கள மக்களில் குறிப்பிட்டளவானவர்கள் திரும்பி வந்துள்ளனர்.

சட்ட விரோதமான மீள்குடியேற்றங்கள் இடம் பெற்றிருந்தால் அது குறித்து அந்தப் பிரதேச அரச அதிபரிடமோ பிரதேச செயலாளரிடமோ முறையிடலாம்.

தேர்தல் நெருங்கியுள்ளதால் பொய் வதந்திகளை சில தரப்பினர் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்


தமிழ் மக்களின் நலன் மறந்து டொலர்களின் பின்னால் சம்பந்தன்

ஐ.ம.சு.மு செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித தெரிவிப்பு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படாமல் வெளிநாட்டு டொலர்களின் பின்னணியில் செயற்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காத சம்பந்தன் பிரிவினர் புலிகளின் இறப்பர் முத்திரையாகவே செயற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித மேலும் உரையாற்றுகையில்:-

புலிகளின் பிடியில் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்கித் தவித்த போதும், அவர்களை அரசாங்கம் பாதுகாப்பாக மீட்டெடுத்த போதும் சம்பந்தன் அந்த மக்களது சுக, துக்கங்களைக் கேட்டறிந்து அவர்களுக்குத் தேவையான எதனையும் செய்து கொடுக்கவில்லை.

கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்குத் தேவையான சகலவற்றையும் அரசாங்கமே செய்து கொடுத்தது. அந்தக் காலகட்டத்தில் அந்த மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் போன்றவர்களை தவிர வேறு எவரையும் தெரியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே தமிழ் மக்கள் அதிகூடிய வாக்குகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவது உறுதி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பந்தனும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இந்தியாவின் பின்னணியில் செயல்படவில்லை. மாறாக வெளிநாடுகளின் டொலர்களின் பின்னணியில் செயற்படுகி ன்றனர்.

இந்தியாவுக்கு சென்று வரும் சம்பந்தன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அறிவித்தல்களை விடுத்து இந்தியா தமது பின்னணியில் இருப்பது போன்று காண்பிக்க முயல்கின்றார். அதில் எந்தவித உண்மையுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

30 வருடங்களுக்கு பின்னர் நாட்டில் பாரிய மாற்றங்களை குறுகிய காலத்தில் ஏற்படுத்தியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. இன்று மாபெ ரும் மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் சமாதான மாக வாழும் சூழல் காணப் படுகின்றது.

இந்த நாட்டிற்குத் தேவையான சகல மாற்றங்களையும் ஜனாதிபதி ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் மக்கள் மீண்டும் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த

வடக்கு, கிழக்கு என்று பிரிக்காமல் முழு நாட்டுக்கும் தேவையான சகல விடயங்களையும் ஜனாதிபதி தனது மஹிந்த சிந்தனையிலும், அதன் தொலை நோக்கத்திலும் தெளிவாக கூறியுள்ளார்.

சகல தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் நிச்சயமாக உரிய தீர்வு தமிழ்மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்படும். இதற்குத் தேவையான திட்டத்தை ஜனாதிபதி வகுத்துள்ளார். அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யுத்தத்தை வெற்றிகொள்ள முடியாது என்றனர். நாங்கள் அதனை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம்.

சம்பந்தன் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மேடைகளில் கூற தயாராக இருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவித்த அமைச்சர் சுசில் மீண்டும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்த முற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக