10 ஜனவரி, 2010

இனப்பற்றுள்ள எந்தத் தமிழனும் பொன்சேகாவை ஆதரிக்கமாட்டான்-சிவாஜிலிங்கம்

இனப்பற்றுள்ள எந்தத் தமிழனும் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கமாட்டார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களைத் தவறாக வழிநடத்துவதாகக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய எந்தத் திட்டமும் இராணுவத் தளபதியிடம் இல்லை. இறுதிவரை யுத்தம் நடத்திய ஓர் இராணுவத் தளபதியைத் தமிழ்க் கூட்டமைப்பு ஆதரிப்பது துர்ப்பாக் கியம் என்றும் தேசிய தொலைக்காட்சி யொன்றுக்கு வழங்கிய பேட்டியில் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் ஓர் இராணுவ அதிகாரி அரசாங்க அதிபராக இருந்தபோது, வடமாகாணத்துக்கு ஓர் இராணுவத் தளபதியை நியமித்த போது எதிர்ப்பு தெரிவித்த சம்பந்தன், நாட்டின் தலைவராகும் ஜனாதிபதி தேர்தலுக்கு முகம்கொடுக்கும் ஓர் இராணுவத் தளபதிக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்தமை மக்களைத் தவறாக வழிநடத்தும் முடிவாகும். தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திகள் நடப்பதை மறுக்க முடியாது. இந்தத் தேர்தலில் ‘தமிழ் மக்களின் சுயத்தை வெளிப்படுத்தவே தனித்துப் போட்டியிடு கிறேன்’ என்றும் சிவாஜிலிங்கம் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக