10 ஜனவரி, 2010

புளொட் சித்தார்த்தனுக்கு ஜனாதிபதி வழங்கிய உத்தரவாதத்திற்கு அமைய புலிகளால் பலாத்காரமாக பிடிக்கப்பட்டோர் 715பேர் நேற்றையதினம் விடுதலை

கடந்தவாரம் ஜனாதிபதிக்கும் புளொட் தூதுக்குழுவினருக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பின்போது புலிகளால் பலாத்காரமாக பிடிக்கப்பட்ட மற்றும் சிறுவர்களை அவர்களது பெற்றோரிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தனர். தற்போது புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறார்களை அவர்களது பெற்றோர்களிடம் இணைந்து வாழவைப்பதே சிறந்த புனர்வாழ்வாகும் என்று புளொட் சித்தார்த்தன் தெரிவித்திருந்தார்.

முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறார்களை அவர்களது பெற்றோர்களிடம் இணைந்து வாழ வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் அவை உடனடியாக மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்று உறுதியழித்தமைக்கு அமைய நேற்றையதினம் புலிகளால் பலாத்காரமாக பிடிக்கப்பட்டோர் மற்றும் சிறுவார்கள் 715பேர் நேற்றையதினம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டனர்.

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 715 பேரையும் ஜனாதிபதியே நேரடியாக பங்குகொண்டு பெற்றோரிடம் கையளித்திருந்தார். வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் வலயம் 2 இல் நடைபெற்ற வைபவத்தின் போதே மேற்படி 715 பேரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். புலிகள் இயக்கத்திலிருந்து படையினரிடம் சரணடைந்தவர்களை பெற்றோர் பொறுப் பேற்றுக் கொண்டனர்.

சரணடைந்தவர்களுள் 15 பேரை ஜனாதிபதியே அவர்களது பெற்றோரிடம் கையளித்தார். ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான மிலிந்த மொர கொட உட்பட பலரும் கலந்துகொண்டனர்.