4 ஜனவரி, 2010

ஜனநாயகத்தையும்இ நீதியையும் மலரச் செய்யவே ஜே.வி.பியுடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம்-ரணில்

நாட்டில் ஜன நாயகத்தை நிலை நாட்டவும் அரசியல் ரீதியாக இனப்பிரச்சினை உட்பட நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்சினை களைத் தீர்க்கவும் ஐ.தே.கவும் ஜே.வி. பியும் இணைந்து செயற்படுவதற்கான இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக எதிர் காலத்தில் ஜனநாயகத்தையும் நீதியையும் மலரச்செய்ய முடியும்.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரம சிங்க நேற்று நடைபெற்ற ஊடகவிய லாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித் தவை வருமாறு: மிக நீண்ட காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சிகளை ஏற்கனவே நாம் ஆரம்பித்துவிட்டோம். இதற்காக புதிய தோர் அரசமைப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவது தொடர்பாக தொடர்ச்சி யான கலந்துரையாடல்களை பல்வேறு கட்சிகளுடனும் நடத்தி வருகின்றோம்.
குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சகல கட்சிகளுடனும் இத் தகைய கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம் நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றின் மூலம் இனப்பிரச்சினைக் குத் தீர்வு காணப்படும். இதுநாள் வரையும் காலத்தை இழுத்தடிப்பதற்கே இத்தகைய நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை புதிய அரசமைப்பின் கீழ்இ சக்திமிக்க நாடாளுமன்றக் குழுவை அமைத்து மிக விரைவாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும்.

சர்வாதிகார ஆட்சி புரியும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை அகற்றி சரத் பொன்சேகாவை ஜனாதியாக்க நாம் முயற்சிப்பது ஜனநாயகம்இ நீதிஇ கருத்துச் சுதந்திரம் என்பவற்றை நாட்டில் மீண்டும் நிலைநாட்டுவதற்கே. இதற்காகத் தான் எதிரும் புதிருமாக இருந்த ஐ.தே.கவும்இ ஜே.வி.பியும் இணைந்து செயற்படுகின்றன.
இதேபோல வருங்காலத்திலும் இனப்பிரச்சினை உள்ளிட்ட சகல பிரச்சினைகளையும் ஏனைய கட்சிகளுடனும் இணைந்து செயற்பட்டு தீர்வுகாண்போம். மீண்டும் ஒரு தடவை தமது உரிமைகளுக்காகத் தமிழ் மக்கள் போராடுவதற்குத் தேவையற்ற வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு அமைந்திருக்கும். இது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடனும் விரிவாக ஆராய்ந்துள்ளோம். மஹிந்த ஆட்சியின் விளைவாக இன்று வடக்கில் மட்டுமல்லாது தெற்கிலும் கூட அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தலைநகரில் பல இடங்களில் இத்தகைய பாதுகாப்பு வலயங்கள் இருக்கின்றன. இதுதவிர தெனியாயவிலும் குருநாகலிலும் மஹிந்த குடும்பத்தின் சொத்துக்கள் உள்ள இடங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக மாறி வருகிறன்றன. யுத்தம் நிறைவடைந்து விட்டதாக அரசு அறிவித்து பல மாதங்கள் கடந்த பின்னரும் இன்னமும் அவை விலக்கிக்கொள்ளப்படவேயில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக