குவைத் நாட்டில் ஊசியேற்றப்பட்டுத் துன்புறுத்தலுக்குள்ளான வி.இலட்சுமி தொடர்பாக மேலதிக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி.எஸ்.ரணவக்க தெரிவித்தார்.
குருநாகல், இம்பாகமுவ என்ற இடத்தைச் சேர்ந்த இலட்சுமி என்பவரது உடலிலிருந்து சத்திர சிகிச்சை மூலம் ஒன்பது ஊசிகள் எடுக்கப்பட்டன.
குருநாகல் வைத்தியசாலையில், டாக்டர் எஸ்.ராஜமந்திரி இவரது உடலிலிருந்து இந்த ஊசிகளை எடுத்தார்.
இன்னமும் ஐந்து ஊசிகள் அகற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இதே நிலை ஏற்பட்டு, அந்நாடு மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக இலங்கையும் கவனம் செலுத்தி வருவதாக ரணவக்க மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக