19 நவம்பர், 2010

பிரம்மா ஒரு தருணத்தில் தான் தான் பெரியவன் விஸ்ணு சிவனைவிட




பிரம்மா ஒரு தருணத்தில் தான் தான் பெரியவன் விஸ்ணு சிவனைவிட என்று கர்வம் கொண்டார் , அப்போது இதை பார்த்த விஸ்ணு சிவனிடம் கூற சிவன் விஸ்ணு இருவரும் சென்றார்கள் பிரம்மாவிடம் பிரம்மா இருந்த இடத்தை விட்டு எழும்பவில்லை ,இருந்த படியே பார்த்தார் அங்கெ சென்ற விஸ்ணு
கூ றினார் எங்கள் இருவரையும் விட குணத்தாலும் உயரத்தாலும் உயர்ந்தவர் சிவன் தான் ஆகவே நாம் இருவருமே சிறியவர்கள் என்றார் எப்படி என்று பிரம்மா வினாவினார் உடனே விஸ்ணு கூறினார் நான் இன்னும் சிவனின் முடியை கூட காணவில்லை என்றார் அதற்கு ஏளனமாக பிரம்மா கூறினார் நீர் முடியை பார்க்கவில்லை என்றால் அவர் பெரியவரா என்றார் இதை பார்த்து கொண்டிருந்த சிவன் கூறினார் இருவருன் முயற்சி செய்யுங்கள் யார் முதலில் என் முடியை கான்கிண்றீர்களோ அவர் தான் பெரியவர் என்றார் ,

உடனே இருவரும் சேர்ந்து முதலில் முடியை தேடி சென்றார்கள் பாதி வளி சென்ற இருவரில் ஒருவரான விஸ்ணு கூறினார் என்னால் இனி முடியாது நீயே பெரியவன் வா திரும்பி செல்வோம் என்றார் ஏற்க மறுத்த பிரம்மா நீ திரும்பிசெல் நான் முடியை பார்த்து தான் வருவேன் என்றார் விஸ்ணு திருன்பினார் பாதி வழியில் பிரம்மா தொடர்ந்தார் முடியை தேடி செல்லும் வழியில் சிவனின் தலையை அலங்கரிக்கும் தாளம்பூ என்ற பெண்ணை கண்டார்
உடனே அவருக்கு ஒரு ஆச்சரியம் இங்கே இவ்வளவு தூரத்தில் ஒரு பெண் உடனே அவர் அந்த பெண்ணிடம் வினாவினார் நீ யார் அதற்கு அந்த பெண் கூறினார் என் பெயர் தாளம்பூ நான் சிவனின் தலையை அலங்கரிப்பவள் என்றாள் பிரம்மாவிற்கு மிகுந்த மகிழ்ச்சி ஒ அப்படியானால் சிவனின் முடி மிக அண்மையில் தான் உள்ளது என்றார்

இதை கேட்ட தாளம்பூ சிரித்தாள் பிரம்மாவிற்குஆச்சர்யமாக இருந்தது ஏன் சிரிக்கின்றாய் என்றார் உடனே தாளம்பூ கூறினார் தங்கள் பதவிக்காலம் எவ்வளவு முற்பது ஆயிரம் ஆண்டுகள் .30 .000 .என்றார் பிரம்மா, உடனே தாளம்பூ கூறினார் நான் சிவனின் முடியை அலங்கரிது விட்டு வரும் இபோது வரைக்கும் இரண்டு பிரம்மாக்கள் பதவி வகித்து விட்டார்கள் நான் தலையில் இருந்து இறங்கி அறுபது ஆயிரம் ஆண்டுகள் என்றார் பிரம்மாவிற்கு தலை சுற்றியது உடனே பிரம்மா அந்த பெண்ணிடம் நீயோ சிவனின் முடியை அலங்கரிப்பவள் உன்னை பார்த்தாலும் சரி சிவனின் முடியை பார்த்தாலும் சரி இரண்டும் ஒன்று தான் அகவே நீ எனக்காக ஒரு பொய் சொல் நான் சிவனின் முடியை பார்த்ததாக என்றார் முதலில் மறுத்த தளம்பூ அவரின் ஆசை வார்த்தைக்கு மயங்கி பொய் சொன்னார் இவை இப்படி இருக்க

விஸ்ணு பூமியை துளைத்து கொண்டு அடியை தேடி சென்றார் சென்று அடியை கண்டார் கண்டதும் சிவனின் பாதங்களை தொட்டு வணங்கினார் காலை தொட்டதும் அதிர்ச்சி யான சிவன் உடனே குனிந்து விஸ்ணுவை தூக்கினார்
அபோது அடியையும் முடியையும் கண்டார் விஸ்ணு அப்படியே சிவன் விஸ்ணுவை தழுவி தூக்கும் காட்சியை பிரம்மாவையும் அழைத்து காட்டினார்
பிரம்மா தோல்வியை ஒப்புகொண்டார் ஆத்திரம் கொண்ட சிவன் பொய் சொன்ன காரணத்தால் இனிமேல் பிரம்மாக்கு என்று ஒரு தனி கோவில் வைத்து யாரும் வழிபட கூடது என்று ஆணையிட்டார் அத்துடன் தளம்பூவை பிரம்மாவுடன் சேர்ந்து பொய் சொன்ன காரணத்தால் எந்த இறை வழிபாட்டிற்கும் எடுக்க கூடது அத்துடன் யாரும் வாசமாக உள்ளது என்று மணக்க வும் கூடாது
பூவுக்குள் சிறு நாகம் இருக்கக்கடவது என்று சாபமிட்டார் ஆகவே அன்பர்களே
பக்தர்களே பணிவு என்பது எந்த பெரியவரையும் பணியவைக்கும்
நன்றி வணக்கம் பணிவையும் பணிய வைக்கும் பணிவு


அன்பு நன்பர்களே ஒருவரின் காலில் விழுந்து பணிவதில் எந்த தவறும் கிடையாது நாம் காலில் விழுந்தால் நிச்சயம் எந்த பெரிய மனிதனும் எம்மை போல் பணிவார் எம்மை தூக்குவதர்று ஆகவே பணிவே பணிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக