19 நவம்பர், 2010

அமைச்சர்கள் வெளிநாட்டு பயணங்களை தவிர்க்கவும் :அரசாங்கம்

வரவு செலவுத்திட்டம் மீதான விவாதங்கள் நடைபெறும் காலப்பகுதியில் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்.பி. க்கள் வெளிநாடுகளுக்கான பயணங்களை தவிர்க்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின்தின் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கடவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதங்கள் நடைபெறும் காலப்பகுதியில் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்.பி. க்கள் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளவேண்டும் என்று உயர்மட்டத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார். இந்நிலையில் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதிவரை பாராளுமன்றத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை திங்கட்கிழமை காலை சுபநேரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தடவை பதவிக் காலத்துக்கான பதவியேற்பு விழா இன்று வெள்ளிக்கிழமை பழைய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ( தற்போதைய ஜனாதிபதி செயலகம்) நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக