9 செப்டம்பர், 2010

அரசியலமைப்பின் 18 வது திருத்தம் நிறைவேறியது ஆதரவு 161 எதிர் 17 மூன்றில் இரண்டுக்கும் மேலதிகமாக 11







அரசியலமைப்பின் 18வது திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நேற்று (08) மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கும் கூடுதலான வாக்குகளால் நிறைவேற்றப் பட்டது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 161 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி 144 மேலதிக வாக்குகளால் 18வது திருத்தம் சபையில் நிறைவேறியது.

சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு இவ்வாறு நிறைவேற்றப்பட்டதும் குழுநிலையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்தார்.

அதன்படி, புதிய சரத்துகளும் உள்ளடக்கப் பட்டுக் குழுநிலையிலும் அங்கீகரிக்கப்ப ட்டது. அதனையடுத்து மீண்டும் மூன்றாவது வாசிப்பை நிறைவேற்ற சபை இணங்குகிறதா என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வினவினார். அப்போது பெயர் கூறி வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சபாநாயகரைக் கேட்டுக்கொண்டார்.

அதற்கமையவும் பெயர் கூறி வாக்கெடுப்பு நடத்தி மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கும் கூடுதலான ஆதரவு டன் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்ற ப்பட்டது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி வெளிநடப்பு செய்திருந்த நிலையில் அக்கட்சியின் அதிருப்தியாளர்க ளான பாராளு மன்ற உறுப்பி னர்கள் லக்ஷ் மன் செனவிர ட்ன, உபேக்ஷா சுவர்ணமாலி, ஏர்ள் குணசேகர, மனுஷ நாணயக் கார, ஏ. ஆர். எம். ஏ. காதர், ஜே. ஸ்ரீரங்கா, நில்வளா விஜேசிங்க ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எதிர்த்து வாக்களித்தாலும் அம்பாறை மாவட்டத்தின் உறுப்பினர் எச். ஏ. பியசேன மாத்திரம் ஆதரவாக வாக்களித்தார். அதேபோன்று ஜனநாயக தேசிய கூட்டணியின் உறுப்பினர்களும் எதிராகவே வாக்களித்தனர்.

தவிரவும், இடதுசாரி கட்சிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்க ளும் சட்ட மூல த்திற்கு ஆதர வாக வாக்களித் தனர். வாக்கெ டுப்பு நடைபெறுவ தற்கு முன்னதாக ஐ. தே. க. அதிருப் தியாளர்கள் ஏழுபேர் சபையில் பிரசன்னமாகியிருந்தனர். 46 பேர் சபைக்குச் சமுகமளிக்க வில்லை. இவர்களுள் ஐ. தே. க. வின் 45 பேர் வெளிநடப்புச் செய்திருந்தனர்.

பிரதமர் தி. மு. ஜயரட்ன வினால் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட 18ஆவது அரசியலமைப்புத் திருத் தச் சட்டமூலம் மீதான இரண்டாவது வாசிப்பு நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

பிரதமர் தி. மு. ஜயரட்ண இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தையும் ஆரம்பித்து வைத்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம். ஏ. சுமந்திரன் எம்.பி. எதிரணியின் சார்பில் விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். ஆளுந்தரப்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ விவாதத்தை ஆரம்பித்தார்.

அதன் பின்னர் இடம்பெற்ற சூடான வாதப் பிரதிவாதங்கள் நிறைந்த உரைகளின் நிறைவில் இரவு ஏழு மணியளவில் சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட் டது. பாராளுமன்ற வாக்கெடுப்பின் போதெல்லாம் எதிராக வாக்களிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 18 ஆவது திருத்தத்தையும் கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்திருந்தது. அதன் உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக