3 மே, 2010

சீன பாஸ்பேட் உரத்தால் வந்தது ஆபத்து:இலங்கையில் பலருக்கு சிறுநீரக பாதிப்பு






இறக்குமதி செய்யப்பட்ட பாஸ்பேட் உரத்தில், 'காட்மியம்' என்ற வேதிபொருள் கலந்திருப்பதால் இலங்கையில் ஏராளமான இளைஞர்கள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாஸ்பேட் உரங்கள், இலங்கையில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உரங்களால் வளர்ந்த அரிசி, தானிய வகைகளை உட்கொள்பவர்கள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பேராசிரியர் சரத் பண்டாரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:பாஸ்பேட் உரத்தில், 'காட்மியம்' என்ற வேதிப்பொருள் உள்ளது. பாஸ்பேட் உரத்தில் விளைந்த உணவுகளை உட்கொண்ட சீனர்கள் பலர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல இலங்கையில் சீன இறக்குமதி பாஸ்பேட் உரங்கள் பயன்படுத்தப்பட்ட அனுராதபுரம், பொலனருவா இடங்களில் உள்ள இளைஞர்கள், சிறுநீரக கோளாறால் அவதிப்படுகின்றனர்.அதிகப்படியான காட்மியம் ரத்தத்தில் கலந்து கல்லீரல் வழியாக சிறுநீரகத்துக்கு சென்று கழிவு பொருட்களை வடிகட்டும் சிறுநீரகத் திறனை பாதிக்கச் செய்கிறது.இவ்வாறு சரத் பண்டாரா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக