3 மே, 2010

பிரபாகரன் தாயார் தமிழகம் வர தடையில்லை; மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம்





புலித்தலைவர் பிரபாகரன் தாயார் தமிழகம் வந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு சார்பில் பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக சட்டசபையில் துணை முதல்வர் மு.க., ஸ்டாலின் தெரிவித்தார். திருவேங்கடம் வேலுப்பிள்ளை மனைவி பார்வதி அம்மாள் மலேசியாவில் இருந்து வருகிறார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சிகிச்சை எடுத்து கொள்வதற்காக கோலாலம்பூரில் இருந்து கடந்த 16 ம் தேதி சென்னைக்கு விமானம் மூலம்வந்தார். ஆனால் அவர் விமானத்தில் இருந்து இறங்க விடாமல் அப்படியே மலேசியாவுக்கு குடியேற்ற துறை அதிகாரிளால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ம.தி.மு.க., மற்றும் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கண்டித்து வைகோ உண்ணாவிரதப்போராட்டம் இருந்தார்.

இந்த விவகாரம் தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டு வரப்பட்டது. இதற்கு பதில் அளித்த முதல்வர் கருணாநிதி இந்த விஷயம் எனக்கு தெரியாது. மத்திய அரசு அதிகாரிகள் எடுத்துள்ளனர். மேலும் பார்வதி அம்மாள் தமிழகத்திற்கு வருவது குறித்து யாருக்கும் தெரிவிக்கவில்லை.

பார்வதி அம்மாள் மின்னஞ்சல் மூலம் கடிதம் : இருப்பினும் அவர் கேட்டு கொண்டாலோ, கடிதம் எழுதினாலோ மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து அனுமதி கிடைத்தால் ஆவண செய்வோம் என்றார். இது தொடர்பாக சென்னை கோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தெரிவித்த கருத்து‌ தெரிவிக்கப்பட்டது. பார்வதி அம்மாள் முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் அனுப்பலாம் என்றும் அரசும் பரிசீலிக்கலாம் என்றும் கூறியது. இதனையடுத்து பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் கடந்த 30 ம் தேதி தமிழக முதல்வர் தனிப்பிரிவு அதிகாரிகளுக்கு தனது பெரு விரல் கைரேகை பதித்து மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தில் நான் சிகிச்சை எடுத்துக்கொள்ள திருச்சி விமானத்தில் வருவதற்கு மலேசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

ஒரளவுக்கு பச்சைக்கொடி : இது தொடர்பாக துணை முதல்வர் மு.க., ஸ்டாலின் சட்டசபையில் விதி 110 ன் கீழ் தானாக முன்வந்து அறிக்கை தாக்கல் செய்தார். அவர் அப்போது கூறியதாவது: பார்வதி அம்மாள் எழுதிய கடிதம் தொடர்பாக பரிசீலித்து . ஆராய்ந்து , மத்திய உள்துறை அமைச்சக செயல் அதிகாரிகளுக்கு பார்வதி அம்மாள் தமிழகம் வரும் விஷயத்தில் அனுமதி அளிக்கலாம் என பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார். மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை எடுத்து கொள்ள முடியும். தமிழக அரசு ஒரளவுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக