13 ஏப்ரல், 2010

மறதி நோயினால் குழந்தை பிறந்ததை அறியாத பெண்



ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரைச் சேர்ந்தவர் ஸ்காட். இவரது மனைவி ரெபேக்கா டாயிக் (31). இவர் கடுமையான மறதி நோயினால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் கர்ப்பம் அடைந்தார். பிரசவ வலி ஏற்படவே அவரை சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு இமிலிரெபேக்கா என பெயரிட்டுள்ளனர். ஆனால் மறதி நோயினால் அவதிப்படும் ரெபேக்காவுக்கு தான் குழந்தை பெற்றது நினைவுக்கு வரவில்லை.

அவருக்கு குழந்தை பிறந்துள்ளதை மற்றவர்கள் நினைவுபடுத்தினாலும் அதை ஏற்று கொள்ளும் மனபக்குவமும் அவருக்கு வரவில்லை. அதனால் அவரது கணவர் ஸ்காட் மிகவும் வருத்தத்தில் உள்ளார்.

இந்த அபூர்வ மறதி நோயினால் எனது மனைவி 80 வயது பெண் போல அதாவது ஒரு மூதாட்டியின் நிலைக்கு மாறிவிட்டார். வெளியில் எங்கும் சுதந்திரமாக சுற்றி திரியும் அவர் திடீரென தான் யார் என்பதையே மறந்து விடுகிறார். இது மாபெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக