13 ஏப்ரல், 2010

எவரெஸ்ட் சிகரத்துக்கு அருகே புதிய விமான நிலையம் சீனா கட்டுகிறது







எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்காக குவியும் வெளிநாட்டு பயணிகள் எல்லோருக்கும் நேபாளம் தான் வாசலாக இருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்றும், அவர்களை சீனாவின் பக்கம் இருந்து மலை ஏறச்செய்யவேண்டும் என்றும் சீனா விரும்புகிறது. இதற்காக அது எவரெஸ்ட் சிகரம் அருகே புதிய விமான நிலையத்தை கட்டுகிறது. அதற்கு அமைதி விமான நிலையம் என்று பெயர் சூட்டி உள்ளது.

இந்த விமான நிலையம் திபெத் பகுதியில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. சீனா-நேபாள நெடுஞ்சாலையில் இது அமைய இருக்கிறது. இது திபெத்தில் கட்டப்படும் 5-வது பயணிகள் விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் அமைந்தால் வெளிநாட்டு பயணிகள் வரத்து அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விமான நிலையத்தின் கட்டுமானப்பணி, இந்த மாதம் தொடங்குகிறது. வருகிற அக்டோபர் மாதம் பணி முடிகிறது. இந்த விமான நிலையத்திற்கு 2 லட்சத்து 30 ஆயிரம் பயணிகள் வந்து செல்ல முடியும்.

இது தவிர இந்த பகுதியில் நக்கூ என்ற இடத்திலும் ஒரு விமான நிலையத்தை சீனா கட்டி வருகிறது. இது தான் உலகத்திலேயே உயரமான இடத்தில் அமைய இருக்கும் விமானநிலையம் ஆகும். இது 4436 மீட்டர் உயரத்தில் கட்டப்பட இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக