தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்காகவே ஆர்ப்பாட்டங்கள் : புத்திரசிகாமணி
ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்காகவே நடத்தப்படுவதாகவும் அதனால் எவ்வித காத்திரமான தீர்வுகளும் எட்டப்படப் போவதில்லை என்றும் நீதி மறுசீரமைப்பு பிரதியமைச்சர் புத்திரசிகாமணி தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்துமாறு கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. அது தொடர்பாக பிரதியமைச்சரிடம் நாம் கேட்டபோதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
"கைதிகள் தொடர்பில் நாம் எடுத்து வரும் நடவடிக்கைகளில் மாற்றங்கள் எதுவும் இடம்பெறப் போவதில்லை.
அரசியல் கைதிகள் என்று இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் தொடர்பில் நாம் விடுதலை வழங்கி வருகின்றோம். மேலும் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக