22 ஜனவரி, 2010

சர்வதேச கண்காணிப்புக் குழுவினர் ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திக்க நடவடிக்கை
No Image


தேர்தல் ஆணையாளரின் அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள சர்வதேச கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் 21 ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்திக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட மட்டத்திலான முகவர்களையும் சந்திக்கவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள்இ வேட்பாளர்களின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கவென சர்வதேச கண்காணிப்புக் குழுக்களுக்கு தேர்தல் ஆணையாளர் அழைப்பு விடுத்திருந்தார்.

ஐக்கிய நாடுகளின் அமைப்புஇ பொது நலவாய நாடுகளின் சபைஇ ஐரோப்பிய ஒன்றியம்இ ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகள் சங்கம் என்பவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இவற்றில் ஐக்கிய நாடுகளின் அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இலங்கைக்கு வரமுடியாது என்பதை காரணங்களுடன் தெரிவித்துள்ளன. இரண்டு சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும் தேர்தல் முடிவின் பின்னர் 28ம் திகதி தங்களது அறிக்கையை தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கும் என்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

பொதுநலவாய நாடுகளின் சபை மற்றும் ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகளின் சங்கம் என்பன இந்தத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.

பொதுநலவாய நாடுகளின் சபையின் கண்காணிப்புக் குழுக்கள்இ அந்த நிறுவனங்களினாலேயே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டமொன்றின் கீழ் காண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளன. ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகளின் ஒன்றியம் தேர்தல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக