கிறிஸ்மஸ்தீவில் 11 இலங்கையர் கைது
அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகள் தடுப்பு முகாமான கிறிஸ்மஸ் தீவில் குழப்பம் விளைவித்ததாக 11 இலங்கை அகதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பேரில் மொத்தமாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் 21க்கும் 36க்கும் இடைப்பட்ட வயதை கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆயுத கையாளல், குழப்பம் விளைவித்தல் மற்றும் தாக்குதல்களை மேற்கொண்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு அகதிகள் பராமரிப்பு குழுமத்தின் உறுப்பினரான இயன் ரின்டோல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த மோதலில் முகாமுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக