22 ஜனவரி, 2010


சகல அரச நிறுவனங்Justify Fullகளிலும் தமிழ் மொழியை அமுல்படுத்த பல நடவடிக்கைகள் முன்னெடுப்பு

அரசியல் விவகார தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளர்

சகல அரசாங்க நிறுவனங்களும் தமிழ் மொழியை அமுலாக்குவதற்கு சாத்தியமான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு அரச கருமமொழிகளைச் செயற்படுத்துவதற்குள்ள குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்திக் கவும் ஆவன செய்யப்பட உள்ளதாக அரசியல் விவகார தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் திருமதி எம். எஸ். விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சகல அரச நிறுவனங்களிலும் அரச கருமமொழிக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தும் அலுவலர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான பொறுப்புக ளும் அறிவி க்கப்பட்டுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார்.

அரசகருமமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக பொறுப்புக்க ளைக் கையளிப்பது தொடர்பாக சகல அமைச்சுக்களினதும் செயலாளர்களுக்கும் மாகாண சபைகளின் தலைமைச் செயலாளர் கள், திணைக்களத் தலைவர்கள், உள்ளூரா ட்சி நிறுவனத் தலைவர்கள், மாகாண அர சாங்க சேவை ஆணைக் குழுச் செயலாளர் களுக்கு சுற்றுநிருபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் நாட்டில் தீவிபத்தில் ஆணொருவர் உள்ளிட்ட ஐந்து இலங்கையர்கள் காயம்-

நாட்டில் அமைந்துள்ள விடுதியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக ஐந்து இலங்கையர்கள் காயமடைந்துள்ளனா. இந்த தீவிபத்து நேற்றுப் பிற்பகலில் இடம்பெற்றிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காயமடைந்தவர்களில் நான்கு பெண்களும் ஆணொருவரும் அடங்குவதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது. எரிவாயு சிலிண்டர்களைப் பரிமாறிக் கொண்டிருந்தபோதே இந்தவிபத்து இடம்பெற்றிருப்பதாக அந்நாட்டுப் பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தீவிபத்து தொடர்பிலான விசாரணைகளை குவைத் பொலிசார் ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் சுகாதார வசதிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை-

இலங்கையில் சுகாதார வசதிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நடவடிக்கைகள் நாடெங்கிலுமுள்ள 25ஆயிரம் சுகாதார மையங்களின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் என்பன இதற்கான உதவிகளை வழங்கவுள்ளன. இதற்கிடையில் தெற்கு ஆசியாவின் சிறந்த சுகாதார மேம்பாட்டை இலங்கை கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசத்துரோக சூழ்ச்சிகளைத் தோற்கடித்து நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது-ஜனாதிபதி-

சூழ்ச்சிகளைத் தோற்கடித்து நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடலில் மாத்திரமன்றி வானிலும் கேந்திரநிலையமாக இலங்கையைக் கொண்டவந்து சிறுவர்களின் எதிர்காலத்தை வெற்றியடையச் செய்ய தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தான் ஒருபோதும் தேர்தலில் வெற்றிபெறுவதை நோக்காகக் கொண்டு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவில்லையெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அத்துடன் நாட்டின் எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தை வெற்றியடையச் செய்யவே தான் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை எதிர்வரும் 26ம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 27ம் திகதியும் ஐக்கிய இலங்கையாக காணப்படுமென்றும் எதிர்க்கட்சிகளுக்கு அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் நிட்டம்புவயில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை பொத்துவிலில் ஆறு மீன்பிடி வள்ளங்களுக்கு தீவைப்பு-


மாவட்டம் பொத்துவில் கொத்துக்கல் பிரதேசத்தில் சிலர் ஆறு மீன்பிடி வள்ளங்கள் தீவைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவமானது நேற்றிரவு 8மணியளவில் இடம்பெற்றதாக பொத்துவில் பொலீசார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளங்களே இவ்வாறு தீவைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் சுமார் 20லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டிருக்கலாமெனவும் தெரிவித்த பொலீசார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கைக்கான வெளிநாடுகளின் நேரடி முதலீடுகள் அதிகரிப்பு-


இலங்கைக்கான வெளிநாடுகளின் நேரடி முதலீடுகள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச வர்த்தக மற்றும் ஏற்றுமதித்துறை அபிவிருத்தியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள பல நாடுகள் விருப்பத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மோதல்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது அரசியல் சுமுகநிலை காணப்படுவதே இதற்கான காரணமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அக்கரைப்பற்று கொலைக் குற்றவாளிக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளிப்பு-

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டிருந்த ஒருவருக்கு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்குமீதான விசாரணை நேற்று கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த பொன்னையா நவரத்னம் என்பவரைக் கொலைசெய்த குற்றத்திற்காக தங்கையா சத்தியசீலன் என்பவருக்கே மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறித்த கொலையாளிக்கு எதிராக அக்கரைப்பற்று பொலீசார் வழக்குத்தாக்கல் செய்திருந்தனர். கல்முனை மேல்நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டு ஒன்றரை வருடத்திற்குள் அங்கு வழங்கப்பட்ட நான்காவது மரணதண்டனை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் வேட்பாளர்களை சந்திக்க நடவடிக்கை-


தேர்தல் ஆணையாளரின் அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள சர்வதேச கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் 21 ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்திக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட மட்டத்திலான முகவர்களையும் சந்திக்கவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், வேட்பாளர்களின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கவென சர்வதேச கண்காணிப்புக் குழுக்களுக்கு தேர்தல் ஆணையாளர்அழைப்பு விடுத்திருந்தார். ஐக்கிய நாடுகளின் அமைப்பு, பொது நலவாய நாடுகளின் சபை, ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகள் சங்கம் என்பவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இவற்றில் ஐக்கிய நாடுகளின் அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இலங்கைக்கு வரமுடியாது என்பதை காரணங்களுடன் தெரிவித்துள்ளன. இரண்டு சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும் தேர்தல் முடிவின் பின்னர் 28ம் திகதி தங்களது அறிக்கையை தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கும் என்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக