2 ஜனவரி, 2010

பொன்சேகா தமது உத்தேச திட்டத்தை இன்று யாழ்.நகரில் அறிவிப்பார்

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா, தாம் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படும் பட்சத்தில், உடனடியாக அவசரகால ஒழுங்கு விதிகளை நீக்கி, உரிய சாட்சியங்கள் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பது குறித்த தனது திட்டத்தை இன்று யாழ்ப்பாணத்தில் அறிவிக்கவுள்ளார் என அறியவருகின்றது.

மேலும் ஆயுதக் குழுக்கள் அனைத்தையும் கலைத்து அவற்றிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்வது குறித்தும் அவர் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் வைத்து அறிவிப்பார் எனத் தெரியவந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள எதிர்க்கட்சி களின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா இங்கு வைத்து இந்த அறிவிப்புகளை விடுப்பார் எனத் தெரிகின்றது.

சரத் பொன்சேகாவுடன் இன்று யாழ்ப்பாணம் வரும் எதிர்க் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணே சன், ரவூப் ஹக்கீம், டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனா ஆகியோர் மதத் தலைவர்கள், அரச சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கான தமது விஜ யத்தை இன்று காலை 9 மணிக்கு நல்லூர் விஜயத்துடன் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா ஆரம்பிக்கவுள்ளார். பின்னர் காலை 10.00 மணிக்கு யாழ். ஆயரைச் சந்திக்கவுள்ள அவர்கள் அதன் பின் னர் யாழ். அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளனர்.

பிற்பகல் 2.00 மணிக்கு மானிப்பாய் வீதியில் உள்ள எதிர்க்கட்சிகளின் அலுவல கத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் இவர்கள் கலந்துகொள்வர்.

பின்னர் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறும் பொதுக்கூட்டத்தில் உரை யாற்றவுள்ள எதிரணித்தலைவர்கள் மாலை 6.00 மணியளவில் பத்திரிகையாளர் களைச் சந்திக்கவுள்ளனர். யாழ். விஜயத்தின்போது யுத்தத்தி னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தனது உடனடி நிவாரணத் திட்டங்கள் குறித்து சரத் பொன்சேகா அறிவிப்பார் எனக் கூறப்பட்டது. மக்களை மீளக் குடியமர்த்துவதைத் துரிதப்படுத்துவது, தமது வீடுகளை இழந்த மக்களுக்கு மாற்றுத் தங்குமிடங்களை வழங்குவது, நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவது போன்ற தமது யோசனை களையும் சரத் பொன்சேகா அங்கு வெளி யிடுவார் எனத்தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத் தில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவது, தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு படையினரைக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மட்டும் நிறுத்தி ஏனைய இடங்களிலிருந்து அவர்களைப் படிப்படியாகக் குறைப்பது ஆகியவை பற்றிய தமது யோசனைத் திட்டங்களை யும் அவர் முன்வைப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.