2 ஜனவரி, 2010

புலிகளின் தலைவர் பிரபாகரனால் தோழர் சுந்தரம் படுகொலை செய்யப்பட்ட 28வது ஆண்டு நினைவுநாள்!!!


புலிகள் இயக்கத்தின் சகோதரபடுகொலை விஸ்வரூபமெடுத்த நாள் இன்றைய நாளாகும். யாழ் சித்திரா அச்சகத்தில் தோழர் சுந்தரம் என்ற புதியபாதை ஆசிரியர் சதாசிவம் சண்முகமூர்த்தி படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 28 ஆண்டுகளாகின்றன.

விடுதலை போராட்டத்தை மக்கள் போராட்டமாகவும், பத்திரிகை ஊடாகவும் மக்களை விழிப்படைய செய்து புதிய போராட்ட பாதையை முன்னெடுத்த தோழர் சுந்தரம் பிரபாகரனின் அதிகாரவெறிக்கு பலியெடுக்கப்பட்ட முதல் பத்திரிகையாளராகவும் தோழர் சுந்தரம் விளங்குகின்றார்.

பத்திரிகை அச்சக பணிகளை பார்வையிடுவதற்காக தோழர் சுந்தரம் அச்சகத்திற்கு சென்றிருந்த சமயம் அங்கே மறைந்திருந்த பிரபாகரனும் அவனது கூட்டத்தினரும் மேற்கொண்ட வெறித்தனமான துப்பாக்கி பிரயோகத்தில் தோழர் சுந்தரம் எம்மிடம் இருந்து பிரிக்கப்பட்டார். தோழ் சுந்தரம் வடக்கு, கிழக்கு, மலையகம் என அவனது பாதங்கள் பதியாத ப+மியே கிடையாது. பிராஜாவுரிமை மறுக்கப்பட்ட மக்களை டக்கு கிழக்கிலே குடிNயுற்றி அவ் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஏதிலிகளாக்கப்பட்ட மக்களை வடக்கு கிழக்கு பகுதிகளில் குடியேற்றுவதிலும் அயராது உழைத்த ஒர் உண்மையான மக்கள் தலைவன்.

காந்தீயம் அமைப்பு ஊடாக தனது அறப்பணிகளை மேற்கொண்டுவந்த தோழர் சுந்தரம் பின்னர் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தில் தன்னையும் ஒருவனாக இணைந்து கொண்டு ஒர் மக்கள் புரட்சியாளனாகவும் மாற்றிக்கொண்ட ஒர் உன்னதமான புரட்சிகரவாதியாவன். செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரனுடன் இணைந்து அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை ஒர் ஆயுதமேந்திரய போராட்ட வழிமுறையுடாகவே வென்றெடுக்க முடியும் என்று கருதி மக்கள் போராட்டத்திற்கு தயார்படுத்தி வந்தவேளையில்தான் அதிகார வெறிகொண்டு அலைந்த பிரபாகரன், தோழர் சுந்தரத்தின் உயிரைபறித்தான். சுந்தரத்தில் ஆரம்பித்த இந்த கோரம் ஒன்று நூறாகி நூறு ஆயிரமாகி கடந்த ஆண்டு மே மாதம் 18ம் திகதியுடன் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்றது.

பகுத்தறிவு கொண்ட தோழர் சுந்தரத்தில் ஆரம்பித்த படுகொலை, கல்விமான்கள், அரசியல்;வாதிகள், புத்திஜீவிகன், சமூக ஆர்வலர்கள், மதகுருமார், ஆண், பெண், சிறுவர், சிறுமி என்று தொடர்ந்து இறுதியில் தானும் தனது குடும்பமும் பலியாக்கப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு விடுதலை போராட்டத்தை மாற்றியமைத்துள்ளது.

அது மட்டுமல்ல அர்த்த புஷ்ரியற்ற பிரபாகரனின் செயற்பாடு எத்தனை ஆயிரம் விதவைகள்,, இளைஞர், யுவதிகளை அங்கவீனர்களாக்கியுள்ளதுடன், சொத்துக்களை இழந்து அரசிடமும், தொண்டர் நிறுவனங்களிடமும் கையேந்தும் நிலைக்கு இட்டு சென்றுள்ளதுடன், மக்களை முகாம்களுக்குள் முடக்கும் நிலைக்கும் வித்திட்டுள்ளது.

அன்று தோழர் சுந்தரம் போன்ற தோழர்கள் முன்னெடுத்த பணியை புரிந்து செயலாற்றியிருந்தால் இன்றைய இந்த அவலம் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்காது. மாறாக எமது இனம் இன்று ஒர் கௌரவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை தோற்றுவித்திருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது.

ஆகவே சுந்தரம் போன்ற தோழர்கள் எமக்கு அன்று ஊட்டிய நற்கருத்துக்கள், போதனைகளை இனியாவது உணர்ந்து மக்கள் குறித்து அவர் கொண்டிருந்த செயற்திறனை நாம் அனைவரும் ஒன்றினைந்து முன்னெடுப்பதே தோழர் சுந்தரம் அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான காணிக்கையாக இருக்க முடியும். அவரது கருத்துக்களை முழுமையாக எம்மால் முன்னெடுக்க முடியாவிட்டாலும் அவர் விட்டு சென்ற அடிசுவடுகளையாவது பின் தொடர்ந்து செல்வோம்.

-புலம்பெயர் தோழர்கள்