30 டிசம்பர், 2009


யாழில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு முற்றாக நீக்கம் : உதய நாணயக்கார
Wind Mill

யாழ். குடா நாட்டில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு முற்றாக நீக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இத்தகவலை வெளியிட்டார்..

இதுவரை காலமும் நள்ளிரவு 12.00 மணிமுதல் அதிகாலை 4.00 மணிவரை யாழ். குடாநாட்டில் ஊரடங்கு அமுலில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்காட்சிகள் தேர்தல் பிரசாரம் நடத்த மட்டு. மாநகர முதல்வர் மறுப்பு


Sri Lanka Navy (SLN) vessels

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரத்திற்கு மட்டக்களப்பு நகரில் மைதானம் வழங்க மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காந்தி சிலை சதுக்கத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்குமர்று கோரி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரம் பெற்ற தேர்தல் முகவர் சேகுதாவூத் பஷீர் (மாகாண சபை உறுப்பினர்) மாநகர ஆணையாளரிடம் எழுத்து மூலம் விண்ணப்பம் செய்திருந்தார்.

மாநகர ஆணையாளரிடம் இதற்கு விண்ணப்பம் செய்திருந்த போதிலும்இ அதற்கான பதிலை மாநகர முதல்வரே தங்களுக்கு எழுத்து மூலம் வழங்கியுள்ளதாக சேகு தாவூத் பஷீர் தெரிவித்தார்.

"குறிப்பிட்ட இடத்தில் முன்கூட்டியே நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் தரமுடியாமைக்கு வருந்துகின்றேன்" என மாநகர முதல்வர் தனது பதிலில் தெரிவித்துள்ளதாக சேகு தாவூத் பஷீர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக