14 டிசம்பர், 2009

தேர்தலில் தமிழ் மக்கள் ஜனாதிபதியையே ஆதரிக்க வேண்டும் - கி.மா. முதலமைச்சர்

No Image

" ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் நிதானமாக முடிவெடுக்கும் உரிமையை பெற்றிருந்தாலும் கிழக்கு மாகாண தமிழர்களைப் பொறுத்த வரை மாகாண சபையைப் பலப்படுத்த வேண்டுமென்றால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்க வேண்டும்" என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறுகின்றார்.

தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் ஏற்பாடு செய்த, 'இளைஞர்களுக்கான விருது வழங்குதல்- 2009' நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று மாலை மகாஜனாக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மத்திய அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எஸ்.எச்.அமீர் அலி ஆகியோர் மன்றத்தின் இளைஞர் சேவைகள் கழகங்கள் சார்பாகப் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,
"தமிழ் மக்களைப் பொறுத்த வரை, இந்தத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற குழப்ப நிலையில் இருப்பது போல் தெரிகின்றது. என்றாலும் அவர்கள் நிதானமாக சிந்தித்து எடுக்கும் முடிவில் தான் இம்மாகாணத்தின் எதிர்காலமே தங்கியுள்ளது.

கடந்த கால யுத்தத்னால் கிழக்கு மாகாணம் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டுப் பின்தள்ளப்பட்டது. இதனைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இம் மாகாணத்தைச் சேர்ந்த சகல தரப்பினரதும் பொறுப்பாகும்.

தற்போது மாகாண சபை நிர்வாகம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு இன்னமும் அதிகாரப் பகிர்வு தேவை. இதற்கான அதிகாரங்களைத் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தான் வழங்க முடியும். இந்நிலையில் கிழக்கு மாகாண மக்கள் அவரையே ஆதரிக்க வேண்டும்" என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக