1 டிசம்பர், 2009

ராஜரட்னத்தின் டி.எப்.சீ.சீ. பங்குகள் நேற்று விற்பனை


பிரபல தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்தின் டி.எப்.சீ.சீ. பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் பங்குப் பரிவர்த்தனையினால் பங்குச் சந்தை மொத்தப் புரள்வு வளர்ச்சியைப் பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பிரபல வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் அமெரிக்கா காவல்துறையினால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க நீதிமன்றம் விதித்துள்ள ரொக்கப் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் ராஜ் ராஜரட்னத்தின் கெலுன் நிறுவன சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதன் ஒரு கட்டமாக இலங்கையில் ராஜ் ராஜரட்னத்திற்கு சொந்தமான டி.எப்.சீ.சீ. வங்கிப் பங்குகள் கொழும்புப் பங்குச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டி.எப்.சீ.சீ. வங்கியின் ஐந்தாவது முக்கிய பங்குதாரராக கருதப்படும் ராஜ் ராஜரட்னம் தனது சகல பங்குகளையும் நேற்றைய தினம் விற்பனை செய்துள்ளார்.

பங்குத் தரகு நிறுவனங்களின் மூலம் இந்த கொடுக்கல் வாங்கல் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

பங்கு ஒன்று 135 ரூபா என்ற விகிதத்தில் சுமார் 12.2 மில்லியன் பங்குகள் நேற்றைய தினம் விற்பனை செய்யப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக