1 டிசம்பர், 2009

மீளக்குடியமர்த்தப்பட்ட கிராமங்களில் தொழில் முயற்சிகளுக்கு இலகுகடன்

15க்கு முன் ஆட்டோக்கள் வழங்க ஏற்பாடு

வடக்கில் மீளக்குடியமர்த்தப்பட்ட கிராமங்கள் ஒவ்வொன்றிற்கும் மூன்று முச்சக்கர வண்டிகள் (ஆட்டோ) வீதம் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாகவும் இவை எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

அத்துடன் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதியில் சிறு வர்த்தக மற்றும் தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கென இலகு கடன் அடிப்படையில் பணம் பெற்றுக் கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள தாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

மீளக்குடியேறியவர்களுள் மூன்று குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த முச்சக்கர வண்டிகள் வழங்கப்படும்.

குறிப்பாக கிராமங்களில் பஸ் போக்குவரத்துக்கு மேலதிகமாக போக்குவரத்து சேவையை இலகுபடுத்தும் விதத்தில் இவை பெற்றுக் கொடுக்கப்ப டவுள்ளன. இதேவேளை நேற்று 143 அரச ஊழியர்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் கடமையாற்றவென அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் தமது போக்குவரத்துக்கென துவிச்சக்கர வண்டி களையும் எடுத்துச் சென்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

ஏ-9 வீதியில் பயணிகள் போக்கு வரத்துக்கும், பொருட்களை ஏற்றி இறக்குவதற்கும் பஸ்கள், லொறிகள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக அரசாங்க வாகனங்கள் செல்வதற்கான அனுமதியும் விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கான வேண்டு கோளை பாதுகாப்பு அமைச்சிடம் நேற்று கோரியதாகவும் அவர் குறிப்பிட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக