வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கிராமங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா மூன்று ஆட்டோக்கள் வீதம் எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதிக்குமுன் பெற்றுக்கொடுக்கவிருப்பதாக வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். மீள்குடியேறியவர்கள் சிறு வர்த்தக மற்றும் தொழில் முயற்சியில் ஈடுபடும் வகையில் இலகு கடனடிப்படையில் பணம் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மீள்குடியேறியோரில் மூன்று குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கே இந்த ஆட்டோக்கள் வழங்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில் இவை பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன. இதேவேளை ஏ9 வீதியில் போக்குவரத்துக்கும், பொருட்களை ஏற்றிச் செல்லவும் பஸ்கள், லொறிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இதற்கு மேலதிகமாக அரச வாகனங்கள் செல்வதற்கு விரையில் அனுமதி வழங்கப்படும் என்றும் வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக