சு.க. மாநாட்டில் மக்களின் வேண்டுகோள்:
மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தியே ஜனாதிபதி இறுதி முடிவு
ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வருடாந்த மாநாட்டில் மக்கள் ஏகமனதாக கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் வேண்டுகோள் குறித்து மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி ஜனாதிபதி இறுதி முடிவை எடுப்பார் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார்.
தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவி யலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:-
மக்களுக்கு உரிய கெளரவத்தை வழங்கும் வகையிலேயே அடுத்தது எந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என பொதுமக்களிடம் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
இதனூடாக புதிய ஜனநாயக வழிமுறை ஒன்றை ஜனாதிபதி நாட்டுக்கு அறிமுகப் படுத்தியுள்ளார். பாராளுமன்றத் தேர்தல் அடுத்த வருட முதற்பகுதியில் நடத்தப்பட உள்ளது.
ஜனாதிபதி விரும்பினால் ஜனாதிபதித் தேர்தலை 2 வருடங்களுக்கு முன் நடத்த முடியும். நவம்பர் 19 ஆம் திகதியின் பின் எந்த நிமிடத்திலும் ஜனாதிபதித் தேர்தலை நடத்தலாம். இந்த மாநாட்டில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக