10 நவம்பர், 2009

சூழ்ச்சிகரமான செயற்பாடுகளில் ஈடுபட முயன்றால் தடைபோட தயங்கமாட்டேன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை


நாட்டில் பிரச்சினைகளை தோற்று விக்கும் சூழ்ச்சிகரமான செயற்பாடு களில் எவரேனும் ஈடுபட முயன் றால் அதற்குத் தடை போடுவதற்கு தயங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரி வித்தார்.

பொருட்கள் தட்டுப்பாடு என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளுக்கு மக்களின் சார்பில் பதில் கொடுப்பதற்குத் தாம் தயாரா கவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி; வெற்றி கொண்டுள்ள சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பலம் தமக்குள்ளதா கவும் தெரிவித்தார்.

கொழும்பு சிலோன் கொண்டி னென்டல் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற தனியார் தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர் சங்கத் தின் 18வது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமதுரையில் மேலும் தெரிவித்ததா வது,

பயங்கரவாதத்தை ஒழித்து யுத்தக் கொடூரமில்லாத நாட்டில் சகலரும் அச்சமின்றி வாழக்கூடிய சூழ் நிலையை உருவாக்குவதாக அன்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நாம் நிறைவேற்றியுள்ளோம். அத னால்தான் இன்று எம்மால் சுதந் திரம் பற்றி பேச முடிந்துள்ளது.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் சமாதானத்தை நிலை நாட்டு வதற்கும் நாம் உபயோகித்த பல த்தை இப்போது அபிவிருத்தியின் பக்கம் திருப்பியுள்ளோம்.

நாட்டின் இறைமையை பாதுகாப் பதற்கு பொருளாதாரத்தைப் பலப் படுத்துவது மிகவும் அவசியமாகி றது.

யுத்தத்துக்கான பாரிய செலவுகளு க்கு மத்தியில் நாட்டின் அபிவிருத்தி யையும் பொருளாதாரத்தையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

அத்துடன் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் சர்வதேசத்தின் நிலைப் பாட்டையும் முகாமைத்துவம் செய்ய நேர்ந்தது. பயங்கரவாதத் துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்த நாடுகளின் கூற்றை ஏற்றுக் கொண்டு அதற்கெதிரான சக்திகளை புறந்தள்ளி நாட்டை ஐக்கியப்படுத்தும் செயற்திட்டத்தைச் சவால்களுக்கு மத்தியில் முன் னெடுக்க எம்மால் முடிந்துள்ளது.

உயர்ரக தேயிலையினால் உலக சந்தையில் சர்வதேச பலமுள்ளவ ர்களோடு எம்மால் போட்டியிட முடிந்துள்ளது. இதன் மூலம் தேயிலைத் தொழிற்துறைக்கு வசந்த காலம் பிறந்துள்ளது.

உலக பொருளாதார நெருக்கடி வேளையிலும் பெருந்தோட்டக் கைத்தொழில் துறையினருடன் பேச்சு வார்த்தை நடத்தி பல்வேறு நிவார ணங்களை வழங்க அரசாங்கம் முன் வந்துள்ளது. உரமானியம், மின்சார மானியம் மற்றும் வங்கிக் கடன் களைப் பெற்றுக் கொடுப்பதிலும் அரசாங்கம் தலையிட்டுள்ளது. தேசிய பொருளாதாரத்தின் அடித் தளம் விவசாயத்துறையே என்பதில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டு ள்ளதன் காரணமாகவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

எத்தகைய சவால்கள் வந்த போதும் இத்துறையை பாதுகாக்க அரசாங்கம் துணிவுடன் முன்வந்தது.

இன்று எமக்கென சுதந்திரமான நாடு உள்ளது. கைத்தொழில் துறை யினர் என்ற வகையில் நாம் மீட்டெடுத்த பிரதேசங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் தெரி வித்தார்.

நிகழ்வில் அமைச்சர்கள் டி. எம். ஜயரத்ன, லக்ஷ்மன் யாப்பா அபே வர்தன உட்பட துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக