29 அக்டோபர், 2009

தடுத்துவைக்கப்பட்டிருந்த 66 இலங்கை அகதிகள் விடுதலை- யு.என்.எச்.சி.ஆர். பொறுப்பேற்பு


தடுப்பு முகாம் ஒன்றிலிருந்து 66 இலங்கை அகதிகள் குடிவரவு அதிகாரிகளினால் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலயத்திடம் இவர்கள் கையளிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள், குழந்தைகள் உட்பட 66 பேர் இவ்வாறு பஸ்வண்டிகளில் ஏற்றப்பட்டு நேற்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களை நாடொன்று பொறுப்பேற்கும் வரை ஐ.நா. அலுவலகத்தின் பாõதுகாப்பில் இருப்பார்கள் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 105 இலங்கையர்கள் கடந்த செப்டெம்பர் முதல் மலேசியாவின் தென் மாநிலமான ஜோஹோரிலுள்ள தடுப்புமுகாமொன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமை காரணமாகவே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

இவர்களில் 6 பேர் கடந்த வாரம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதுடன் தங்களை யு.என்.எச்.சி.ஆர். அதிகாரிகள் சந்திப்பதற்கு அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர். அத்துடன் தங்களுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் கோரியிருந்தனர். இவர்களுள் 66 பேருக்கான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாகவும் ஏனையோர் தொடர்பான விசாரணைகள் விரைவில் நடைபெறுமெனவும் குடிவரவு பிரதி இயக்குநர் அம்ரான் அஹமட் தெரிவித்துள்ளார். இந்த 105 பேரில் 17 பேர் மீது குடிவரவு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவருமே சிறந்தமுறையில் கண்காணிக்கப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த அகதிகள் தொடர்பில் துரிதமான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை விடுதலை செய்தமைக்கு அதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலய வெளியுறவு அதிகாரி, மலேசிய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ளோரை விரைவாக விடுதலை செய்ய சாத்தியமான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக