6 அக்டோபர், 2009

திருச்சி அகதிகள் முகாமில் இலங்கைத் தமிழர் கொலை


திருச்சி, கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் தங்கியிருந்த சத்யசீலன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்துத் தெரிய வருவதாவது :

நேற்று மாலை (05) நடந்த இந்தக் கொலை தொடர்பாக நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொட்டப்பட்டு முகாமில் தங்கியிருந்த அய்யன் என்பவர் மரணமடைந்தார். இவரது மரண செய்தியைக் கேள்விப்பட்டு, வாழவந்தான்கோட்டை முகாமில் தங்கியிருந்த சத்யசீலன் (35) என்பவர் அங்கு வந்திருந்தார்.

அப்போது, ராஜகோபால், அவரது மகன்கள் ரபிநேசன், சசிதரன் மற்றும் சாந்தன் ஆகியோருக்கும், சத்யசீலனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அய்யனின் இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர் சத்யசீலனுக்கும், மேற்சொன்ன நான்கு பேருக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது.

இதன்போது சசிதரன், கத்தியால் சத்யசீலனை குத்தியுள்ளார். படுகாயமடைந்த சத்யசீலன், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் இடைவழியிலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக