6 அக்டோபர், 2009



ஹிலாரி கிளின்டனின் பேச்சுக் குறித்து இலங்கை தெரிவித்த ஆட்சேபனைக்கு அமெரிக்கா பதில்

இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டிய தேவை இல்லை -அமைச்சர் முரளிதரன்



இலங்கையில் நிலைமைகள் முன்னேறி வருகின்ற நிலையில் தமிழ்நாட்டில் தங்கி உள்ள 2 லட்சம் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டிய தேவை ஏதும் இல்லை என்று அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தங்கி இருக்கக்கூடிய இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.

அந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அது தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து எடுத்துக் கூறி இருந்தார்.

தி.மு.கவின் இந்த நடவடிக்கையை வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ரவிசங்கரும் வரவேற்றிருந்தார். அத்துடன், ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் அத்தகைய தேவை எதுவும் இல்லை என மறுத்துள்ள அமைச்சர் முரளிதரன், இலங்கையில் நிலைமைகள் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டு வருவதால் இந்தியாவில் இருந்து தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கு இதுதான் சரியான தருணம் எனவும் குறிப்பிட்ட

இலங்கையில் அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்படும் பெண்கள் அண்மையில் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் தங்களிடம் இல்லை என்று தெரிவித்த அமெரிக்கா, நீதி விசாரணையற்ற கொலைகள், ஆட்கள் காணாமல் போதல், தடுப்புக் காவலில் வைக்கப்படுவோர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் குறித்து கவலை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், இலங்கையில் குறிப்பாக அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் பாலியல் வல்லுறவுக்கும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உள்ளாக்கப்படும் பல்வேறு சம்பவங்கள் குறித்து அமெரிக்க அசாங்கமும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களும் பல வருடங்களாக சுட்டிக்காட்டி வந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள இராஜாங்க திணைக்களத்தில் உலக பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் மெலானே வேர்வீர், உலகின் ஏனைய பகுதிகளில் யுத்தங்களின் போது இடம்பெற்றது போன்று இலங்கையில் அண்மைக் கால யுத்தத்தில் 2006லிருந்து 2009 வரை யுத்த ஆயுதமாக பாலியல் வல்லுறவு பயன்படுத்தப்பட்டதாக அறிக்கைகள் தமக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த விளக்கம் இலங்கை எழுப்பிய கேள்விக்கு தீர்வு தந்திருக்கும் என்று தாங்கள் நம்புவதாகவும் இலங்கையில் இடம்பெறும் நீதி விசாரணையற்ற கொலைகள், தடுப்புக் காவல் கைதிகள் மீதான துஷ்பிரயோகங்கள் ஆகியன குறித்து அமெரிக்கா தொடர்ந்து விசனம் தெரிவிப்பதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாதானத்தை நிலைநாட்டுவதிலும் மனித உரிமைகளை பேணுவதிலும் இலங்கை எதிர்காலத்தில் கவனம் செலுத்துமென இராஜாங்க செயலாளர் கிலாரி கிளிங்டன் நம்புவதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிலாரி கிளின்டன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிகழ்த்திய உரை குறித்தே இலங்கை ஆட்சேபனை தெரிவித்திருந்தது.

பொஸ்னியா, பர்மா, இலங்கை ஆகிய நாடுகளிலும் வேறு நாடுகளிலும் யுத்த ஆயுதமாக பாலியல் வல்லுறவு பயன்படுத்தப்பட்டமை பற்றி நாம் அறிந்திருக்கிறோம் என்று ஆயுத போர்களின் போது பாலியல் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனக் கோரும் பிரேரணை பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்பட்ட போது உரையாற்றிய கிலாரி கிளின்டன் தெரிவித்திருந்தார்.

பல தசாப்த கால யுத்தத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட இலங்கையில் இந்த உரை குறித்து எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கெதிரான இறுதிக்கட்ட யுத்தத்தை கையாண்ட விதம் குறித்து இலங்கைக்கு எதிராக பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட யுத்தக் குற்றச்செயல் தொடர்பான பிரேரணையிலிருந்து சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் வீட்டோ வாக்குத் தடுப்பு உரிமையை பயன்படுத்தியதால் இலங்கை தப்பிக் கொண்டது.

இந்த வருடம் இடம்பெற்ற தீவிர யுத்தத்தில் சுமார் 7,000 சிவிலியன்கள் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தெரிவித்தது. யுத்தத்திலிருந்து தப்புவதற்கு முயற்சி செய்து தற்போது கட்டாய தடுப்புக் காவல் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 2 இலட்சத்து 50 ஆயிரம் தமிழ் மக்களை முகாம்களிலிருந்து விடுவிக்குமாறு தற்போது இலங்கைக்கு சர்வதேச அழுத்தங்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இவர்கள் விடுதலைப் புலிகளா என்பதை அறிந்து கொள்வதற்காக தாம் இவர்களை தடுத்து வைத்து சோதினை நடத்தி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக