2 அக்டோபர், 2009

புலிகளுக்கு ஆயுதம் விநியோகித்த குற்றச்சாட்டின்பேரில் சிங்கப்பூர் மறுமலர்ச்சி கட்சி முன்னாள் உறுப்பினர் கைது-

புலிகளுக்கு ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு சிங்கப்பூர் மறுமலர்ச்சி கட்சியின் முன்னாள் உறுப்பினரான பால்ராஜ் நாயுடு சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இவர் கடந்தவாரம் அவரது வீட்டில்வைத்து கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இவர் அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள இரண்டு வழக்குகள் தொடர்பில் தேடப்படும் ஒருவராக இருந்து வருகிறார். அதேநேரம் இலங்கையின் புலனாய்வு பிரிவினரும் இவர் புலிகளுக்காக ஆயுதங்களை விநியோகத்தார் என்ற தகவலை வெளியிட்டுள்ளனர். கைதான இவர் நேற்றுமுன்தினம் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டுள்ளார். இருப்பினும், எதிர்வரும் 05ம் திகதிவரையும் வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின்பேரில் இவர் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அவரைத் தங்களிடம் கையளிக்க வேண்டுமென்று அமெரிக்க அரசு சிங்கப்பூரிடம் கோரியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கேபியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக