மனிதாபிமான யுத்த நடவடிக்கையின்போது பாலியல் துஸ்பிரயோகங்களை படைவீரர்கள் ஒரு ஆயுதமாக கொண்டிருந்ததாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் கிலாரி கிளிண்டன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இன்று மறுத்துள்ளார். கிலாரி கிளிண்டனின் இந்தக் குற்றச்சாட்டானது அடிப்படையற்றது. இறுதிக்கால யுத்தக்காலமான மூன்றரை வருடத்தில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின்போது இவ்வாறான வழிமுறைகள் படையினரால் கைகொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் படையினர்மீது இதுகுறித்த குற்றச்சாட்டுக்கள் எந்தவொரு அமைப்பினராலும், சர்வதேச நிறுவனங்களாலும் முன்வைக்கப்படவில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் கிலாரி கிளிண்டனின் இக்கருத்து ஏற்றுக்கொள்ள முடியாததொன்று என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக