18 செப்டம்பர், 2009

சனல் 4 வீடியோ காட்சியின் மூலப்பிரதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவிப்பு-


பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டஇலங்கை இராணுவம் தொடர்பிலான சர்ச்சைக்குரிய காட்சிகளின் மூலப்பிரதிகண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்தியநிலையம்அறிவித்துள்ளது. இந்த மூலப்பிரதியில் தமிழ்மொழியில் சம்பாஷணைகள்இடம்பெறுவதாகவும் மத்தியநிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் குறித்தகாட்சிகள் திறந்தவெளிப் பிரதேசமொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகதேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்தியநிலையம் மேலும் தெரிவித்துள்ளது .



வவுனியா, தாண்டிக்குளத்தில் ரயில்கள்மீது தாக்குதல், ரயில் சாரதி காயம்-

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் சேவையில் ஈடுபட்டிருந்த இரண்டுரயில்கள்மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இனந்தெரியாத நபர்களினால்கற்கள் வீசப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வேதிணைக்கள வர்த்தகப் பிரிவு அதிகாரி விஜய சமரசிங்க தெரிவி;த்துள்ளார். இந்த தாக்குதல்கள் கடந்த இரண்டு நாட்களாக தொடர்வதாகவும், இதனால்குறித்த ரயில்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், ரயில் சாரதியொருவர்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார். இத்தாக்குதல் தொடர்பில் பொலீசாரிடம் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த விஜய சமரசிங்க, இச்சம்பவத்துடன்தொடர்புடையவர்கள்மீது விரைவில் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென்றும்கூறியுள்ளார்.

விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய இந்திய விவசாய நிபுணர்கள் வருகை-

ஆறுபேர் கொண்ட இந்திய விவசாய நிபுணர்கள் குழு 04நாள் விஜயத்தினைமேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளது. இந்திய விவசாய ஆராய்ச்சிசபையின் பிரதிப்பணிப்பாளர் எஸ்.பி.திவாரி இந்தக் குழுவுக்கு தலைமைதாங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியஅரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 500கோடி இந்திய ரூபாய் நிவாரணவேலைத்திட்டங்களின் கீழ் வடக்குப் பிரதேசங்களில் விவசாயமுன்னெடுப்புக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் நிபுணர்கள்குழுஆராயுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வருகை தந்திருந்த இந்தநிபுணர்கள்குழு ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ச எம்.பிமற்றும் விவசாய மீன்பிடி மற்றும் பெருந்தோட்டத்துறைசார்பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளது. அத்துடன்இக்குழுவானது நாளை வவுனியாவுக்கான விஜயத்தினைமேற்கொள்ளவுள்ளதென்று கூறப்படுகின்றது.



அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்தல், இரத்துச் செய்தல் தொடர்பிலான சட்டவரைவு சீர்திருத்தத்தை மீண்டும் சமர்;ப்பிக்க நடவடிக்கை-

அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்தல் மற்றும் அவற்றை இரத்துச் செய்தல் தொடர்பிலான சட்டவரைவு சீர்திருத்தத்தை மீண்டும் எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவிருப்பதாக கலாச்சார அபிவிருத்தி மற்றும் புனிதபூமி அபிவிருத்தியமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய அந்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் ஏற்கனவே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் அதன் சில சரத்துக்களுக்கு எதிர்ப்பு வெளியிட்ட எதிர்க்கட்சிகள் அதற்கு எதிராக வழக்குத் தாக்கலும் செய்திருந்தன. இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு அண்மையில் வழங்கப்பட்டிருந்ததை அடுத்து அதற்கமைய சர்ச்சைகளுக்குள்ளான சரத்துகள் நீக்கப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக