1 செப்டம்பர், 2009

திஸ்ஸாநாயகத்தின் சிறைத்தண்டனை குறித்து அமெரிக்கா அதிருப்தி


ஊடகவியலாளர் திஸ்ஸாநாயகத்திற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டமை தொடர்பில் தாம் அதிருப்தி கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஏற்கனவே திஸ்ஸாநாயகத்தின் கைது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கருத்துரைத்திருந்த நிலையிலேயே இந்த புதிய கருத்தை அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ரொபட் வூட் தெரிவித்துள்ளார்.

திஸ்ஸாநாயகத்திற்கு எதிரான தீர்ப்பு குறித்து அமெரிக்கா அதிருப்தி கொள்வதாகவும் தொடர்ந்தும் இலங்கையின் ஊடக சுதந்திரம் குறித்து கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஊடகவிலாளர் திஸ்ஸாநாயகம் சிறைத் தண்டனைக்கு உட்பட்டிருக்கும் காலத்தில் அவருடைய உடல் நலன் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ரொபட் வூட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த மே முதலாம் திகதி உலக பத்திரிகை சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்பட்ட வேளையில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா திஸ்ஸாநாயகத்தின் கைது குறித்துச் சுட்டிக்காட்டியிருந்தார். தமது பணிகளைச் செய்யும் போது குற்றவாளியாக்கப்பட்டுள்ள ஒருவருக்கு, திஸ்ஸாநாயகத்தை உதாரணம் காட்டிப் பேசியுமிருந்தா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக