20 டிசம்பர், 2009

பணம், நகைகளை டிபாசிட் செய்வதில் முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் ஆர்வம்: இலங்கை வங்கிகள் உற்சாகம்




கொழும்பு: இலங்கை முகாம்களில் அமைக்க பட்டுள்ள வங்கி கிளைகளில் பணம் மற்றும் தங்க நகைகளை அங்கு வசிக்கும் தமிழர்கள் பெருமளவில் டிபாசிட் செய்து வருகின்றனர். இதுவரை 810 கோடி ரூபாய் அளவுக்கு டிபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந் ததை அடுத்து, அந்த பகுதியில் வசித்த தமிழர்கள், முகாம்களில் தங்க வைக் கப்பட்டுள்ளனர்.இவர்கள் படிப்படியாக, அவர் களது சொந்த ஊர்களில் மறு குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இங்குள்ள தமிழர்கள் வசதிக் காக, இலங்கை மத்திய வங்கி சார்பில் அனைத்து முகாம்களிலும் வங்கி கிளைகள் தற்காலிகமாக அமைக்கப் பட்டுள்ளன. இவற்றில் சில, ஏ.டி.எம்., வசதியுடைய மொபைல் வங்கிகளாகவும் இயங்கி வருகின்றன.இந்த வங்கி கிளைகளில், பெருமளவு பணம் மற்றும் நகைகளை தமிழர்கள் சமீபகாலமாக டிபாசிட் செய்து வருகின்றனர்.

இதுவரை 810 கோடி ரூபாய் மதிப்புக்கு டிபாசிட் செய்யப்பட்டுள் ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தங்களிடம் உள்ள பணம் மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, முகாம்களில் உள்ள தமிழர்கள் வங்கி கணக்குகளை துவங்கியுள்ளனர்.அதேபோல் தங்களிடம் உள்ள நகைகளை பத்திரமாக வைத்துக் கொள்வதற்கு, லாக்கர் வசதியையும் கேட்டு பெறுகின்றனர்.இலங்கை மத்திய வங்கியின் கவர்னர் அஜித் காப் ரால் கூறியதாவது: டிபாசிட் செய்யப் பட்டுள்ள நகைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள் வதற்காக, வங்கி சார்பில் 40 அடி நீளமுள்ள கன்டெய்னர் ஒன்று, மொபைல் வங்கியாக மாற்றப் பட்டுள்ளது.முகாம்களில் உள்ளவர்கள், வெளிநாடுகளில் உள்ள தங்களது உறவினர்களை தொடர்பு கொண்டு, பணம் அனுப்பும்படி கூறி வருகின்றனர்.

இதற்காக, வங்கிகள் சார்பில் தகவல் தொடர்பு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து விரைவில் அதிக அளவில் பணம் வரும் என தெரிகிறது. இதனால், டிபாசிட் தொகை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு வங்கி கிளைகளை அமைப்பதற்கு 16 வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய கிளை திறக்கப்படுகிறது. இவ்வாறு காப்ரால் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக