24 நவம்பர், 2009

ஜனவரியில் இலங்கை அதிபர் தேர்தல்


புது தில்லி, நவ. 23: இலங்கையில் அதிபர் தேர்தல் 2010 ஜனவரியில் நடைபெறுகிறது.÷இலங்கையில் ஆளும் கூட்டணியின் கட்சித் தலைவர்கள் அதிபர் மகிந்த ராஜபட்ச இல்லத்தில் திங்கள்கிழமை சந்தித்தனர். இதில் 2010 தொடக்கத்தில் அதிபர் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது என செய்தித் துறை அமைச்சர் அனுரா யாபா தெரிவித்தார்.÷ ராஜபட்சவின் 6 ஆண்டு பதவிக் காலம் 2012 நவம்பரில் நிறைவடைகிறது. அதிபர் பதவியை 4 ஆண்டுகள் பூர்த்தி செய்துவிட்டால் முன்னதாகவே தேர்தல் நடத்த அதிபர் முடிவெடுக்க இலங்கை அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது.÷அதிபர் தேர்தலில் ராஜபட்சவை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா களம் இறங்கும் வாய்ப்புள்ளது. புலிகளுடனான போரின்போது ராணுவப் படை தளபதியாக இருந்த பொன்சேகா முப்படைகளின் தளபதி பதவியை அண்மையில் ராஜிநாமா செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக