24 நவம்பர், 2009

இலங்கையில் இறுதியானதும் நிரந்தரமானதுமான சமாதானத்தை பிரிட்டன் எதிர்பார்ப்பதாக தெரிவிப்பு-

இலங்கையில் இறுதியானதும், நிரந்தரமானதுமான சமாதானத்தை எதிர்பார்ப்பதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலர் டேவிட் மில்லிபாண்ட் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினையின் தீர்வுக்கு முன்மாதிரியான அரசியல் முன்னெடுப்புக்கள் அவசியமென அவர் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்த மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு அனுமதித்த இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பானது வரவேற்கத்தக்க விடயமெனத் தெரிவித்த அவர், இலங்கையில் நிரந்தரத் தீர்வே தமக்குத் தேவையென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக