8 நவம்பர், 2009

துயர் பகிர்வோம்.. !!! (புளொட் பிரான்ஸ்கிளை அமைப்பாளர் தோழர்பிரபாவின் இறுதிக்கிரியை குறித்த அறிவித்தல்..!)

plotepirapa1119


தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரும், கழகத்தின் பிரான்ஸ் கிளையின் அமைப்பாளருமான தோழர்.பிரபா அவர்கள், 30.10.2009 அன்று அகால மரணமானார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம். அன்னார் ராஐமனோகரன் பரமேஸ்வரி ஆகியோரின் புதல்வரும். யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டியை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வாழ்விடமாகவும் கொண்ட இராஜமனோகரன் பிரபாகரன் என்கிற இயற்பெயரைக் கொண்ட தோழர், நண்பர்களாலும், கழகத் தோழர்களாலும் பிரபா என அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார். தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் 84களில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர் பிரபா அவர்கள், கழகத்தில் பல்வேறு பயிற்சிகளையும் பெற்றதுடன், கழகம் முன்னெடுத்த மக்கள் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் களத்தில் 1987ம் ஆண்டு வரை செயலாற்றி வந்தார்
.

ஒரு சிறந்த மக்கள் போராளியாகவும், அரசியல் செயற்பாட்டாளராகவும், மனிதாபிமானம் மிக்கவராகவும் பணியாற்றி வந்த தோழர் பிரபா, தமிழ் மக்களின் விடியலில் அதீத அக்கறை கொண்டிருந்தார். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தையடுத்து 1987ல் புலம்பெயர்ந்த தோழர் பிரபா, சுவிஸ் நாட்டில் புளொட் அமைப்பின் சுவிஸ் கிளை உறுப்பினராக செயற்பட்டு வந்தார். சுவிஸ் கிளையில் உறுப்பினராக செயற்பட்ட வேளைகளில் பல்வேறுபட்ட நெருக்குவாரங்கள், உயிர் அச்சுறுத்தல்கள், இடையூறுகளை எதிர்கொண்ட போதிலும் அவற்றை பொருட்படுத்தாது மனந்தளராது துணிச்சலுடன் கழக வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தார்
.

பின்பு பிரான்ஸ் நாட்டிற்குச் வந்து இங்கு வசித்து வந்த பிரபா, கழகத்தின் பிரான்ஸ் கிளையின் செயற்பாட்டுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டு பிரான்ஸ் கிளையின் அமைப்பாளராக தனது இறுதி மூச்சுவரை செயற்பட்டு வந்தார். புலம்பெயர் நாடுகளில் வசித்து வரும் கழக அங்கத்தவர்களையும், ஆதரவாளர்களையும் ஒருங்கிணைக்கும் பாரிய பொறுப்பினை ஏற்று அதனை செவ்வனே செய்து வந்ததுடன், அண்மையில் போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்து, புலம்பெயர் தமிழ் சமூகத்தின் மனசாட்சியை தட்டியெழுப்பி, இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகள் சென்றடைவதற்கான வேலைத் திட்டங்களிலும், அவர்களுக்கான உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளிலும் முனைப்புடன் ஈடுபட்டிருந்தார்
.

இவருடைய திடீர் மறைவானது கழகத்திற்கும் அல்லல்ப்பட்டு நிற்கும் மக்களுக்கும் ஓர் பேரிழப்பாகும். அன்னாரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்ற அதேவேளை, அவர் விட்டுச் சென்ற மக்கள் பணியை தொடர்ந்து முன்னெடுப்போம் என உறுதிபூண்டு எமது இதய அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றோம்
.

பார்வைக்கு வைக்கும்
இடம்: 12.11.2009 வியாழக்கிழமை அன்று காலை 11.00 - 11.30

Institut Médico Légal de Paris 2, Place Mazas, 75012 PARIS, Métro : Quai de la Râpée
தகனம் செய்யுமிடம்
: 12.11.2009 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 14.10 - 15.10

Place Gambetta 71, rue des Rondetta, 75020 PARIS, Métro : Gambetta


தெடர்புகளிற்கு
: சகோதரன்.. (0033) 06 66 28 96 03 (0033) 06 66 28 96 03 , தோழர்கள்.. (0033) 06 28 70 48 59 (0033) 06 28 70 48 59 // (0033) 06 50 27 24 72 (0033) 06 50 27 24 72

-தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
-ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
தகவல்.. ஊடகப்பிரிவு
-புளொட் பிரான்ஸ் கிளை

plotepiraba-004plotepirapa1plotepiraba-002plotepiraba-005plotepiraba-006

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக