இலங்கைக்கு நாளை வரவுள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் இவ்விடயங்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.
இலங்கையிலிருந்து மக்கள் எவ்வாறு படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் வருகிறார்கள் என்பது குறித்து ஆராய்வதற்காக அவுஸ்திரேலியா பிரதமர் கெவின் ரூட்டின் விசேட தூதுவர் ஜோன் மெக்கர்த்தி இலங்கைக்கு வரவுள்ளதாக தன்னை இனம் காட்டிக்கொள்ள விரும்பாத அப்பேச்சாளர் தெரிவித்ததாக அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பில் குறிப்பாக அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரி படகு மூலம் வரும் இலங்கையர்கள் தொடர்பாக நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம் எனவும் அப்பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோத குடியேற்ற வாசிகள் அதிகமாக வரும் நாடென்பதில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கை முந்திக்கொண்டு இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அண்மையில் 39 இலங்கையர்களை ஏற்றிக்கொண்டு அவுஸ்திரேலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் 12 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் வங்கியின் தலைவர் டபிள்யு. கருணாஜீவ உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். 'வடக்கின் வசந்தம்' அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் புலோலி, கோப்பாய், கல்வியங்காடு, நாவலர் சந்தி, பண்டத்தரிப்பு ஆகிய இடங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட மக்கள் வங்கியின் சேவை நிலையங்களையும், காங்கேசன்துறை வீதியில் அமைக்கப்பட்ட தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரம் ஆகியவற்றையும் மேற்படி அதிகாரிகள் குழு திறந்து வைத்தது.
காலை 8 மணிக்கு புலோலியில்முதலாவது திறப்பு விழா நிகழ்வு ஆரம்பமானது. தொடர்ந்து ஒவ்வொரு சேவை நிலையமாகத் திறந்துவைக்கப்பட்டன. புலோலியில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் மக்கள் வங்கியின் தலைவர் கருணாஜீவ, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு குளிரூட்டி பொருத்துவதற்காக ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான நிதியினை வழங்கினார்.
அதேவேளை நாவலர் வீதயில் திறந்து வைக்கப்பட்ட சேவை நிலையத்தில் வைத்து, யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையின் 8ஆம் விடுதியை நவீனமயப்படுத்த 5 லட்சம் ரூபாய் நிதியினை மக்கள் வங்கியின் தலைவர், யாழ். போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி சிவன்சுதனிடம் வழங்கினார்.
ஓவ்வொரு சேவை நிலையத்திலும் வாடிக்கையாளர்களால் வைப்பிலிடப்பட்ட வைப்பை பெற்றுக் கொண்ட மக்கள் வங்கியின் தலைவர், வாடிக்கையாளர்களுக்கு பரிசில்கள் வழங்கினார். மக்கள் வங்கியின் தலைவர் சேவை நிலையங்களில் உரையாற்றும் போது,
"1982 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மக்கள் வங்கியினால் உரிய சேவையினை வழங்க முடியாமல் போய்விட்டது. அதற்கு நாங்களோ, நீங்களோ காரணமல்ல. 36 ஆண்டு கால யுத்தம் தான் காரணம். தற்போது அந்தக் குறையினைத் தீர்ப்பதற்காக சேவை நிலையங்களை இன்று திறக்கின்றோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நாம் தவறவிட்ட சேவைகளையும் அனைத்தையும் வழங்குவோம்.
சேவை நிலையங்களில் பணிபுரிவதற்காக 42 உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்துள்ளோம். மேலும் 25 பேரை இணைக்கவுள்ளோம். யாழ்ப்பாணம் கல்வித்துறையில் சிறந்து விளங்கும் ஒரு மாவட்டம். தென் பகுதியில் பெரும்பாலான வைத்தியர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். அதனைவிட பல பெரிய பதவிகளிலும் தமிழர்கள் உள்ளனர். நான் என் வாழ்க்கையில் 40 வருடங்களுக்கு மேலாக தமிழர்களுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளேன்.
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களிடம் சேமிப்புக்களைப் பெற்று நாம் கொழும்பு செல்லாமல் அவர்களின் பணத்தை இங்கேயே அவர்களுக்குக் கடனாக வழங்குகின்றோம். ஆரசாங்கத்தின் ஏற்பாட்டில் அதற்கான வட்டியை குறைத்துள்ளோம். எனவே பொதுமக்கள் எங்கள் வங்கியில் கடன்களைப் பெற்று உங்கள் தொழிற்றுறையை வளர்த்துக் கொள்ளலாம். மீன்பிடி, விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்த இந்தக் கடன்கள் வழங்கப்படுகின்றது..
10 வருடத்திற்கு மேல் உரிமை கோரப்படாத பணத்தினை மத்திய வங்கி தமக்கு அனுப்புமாறு கேட்டுக்கொ
ண்டது. எனினும் நான் மத்திய வங்கியின் ஆளுநருடனும், ஜனாதிபதியுடனும் கதைத்து அதனை எங்கள் வங்கியிலேயே இருப்பில் வைத்துள்ளோம். இப்படியான வைப்புக்களை இனிவரும் காலங்களிலும் பாதுகாப்போம். வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் அங்கு இருக்கும் போது மக்கள் வங்கியில் தமது நகைகளை அடவு வைத்திருந்தால், பணம் வைப்பிலிட்டிருந்தால் அதற்கான பற்றுச்சீட்டினை வைத்திருக்கும் பட்சத்தில் உரியவை கொடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்
விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான போர் முடிந்து 6 மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 26 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் சட்டத்தை நீக்க வேண்டும் என்றார்.
அத்தோடு போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் குறித்தும் இலங்கை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்
இலங்கையின் பொருளாதாரம் அண்மைய காலமாக செயல்பட்டுவரும் விதத்தை மீள்பரிசீலனை செய்த பின்னர், இரண்டாம் தவணைக் கொடுப்பனவாக 33 கோடி டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு ஐ.எம்.எப். நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் கோடி டொலர்களை கடனாக இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம தீர்மானித்திருந்தது.
இலங்கையின் பொருளாதாரம் செயல்படும் விதத்தை கவனத்தில் கொண்டு இருபது மாத காலகட்டத்தில் மொத்தக் கடன் தொகையை பல்வேறு தவணைகளாக வழங்குவது என்று முடிவுசெய்யப்பட்டிருந்தது.
முதல் தவணையாக 33 கோடிடொலர்களை உடனடியாகவே இலங்கையிடம் கொடுத்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை சில மாதங்கள் இடைவெளிக்குப் பின் இலங்கையின் பொருளாதாரம் எவ்விதமாக செயல்படுகிறது என்பதை தற்போது மீள்பரிசீலனை செய்துள்ளது.
இந்த மீள் பரிசீலனையின் முடிவில் இரண்டாவது தவணையாக மேலும் 33 கோடி டாலர்களை வழங்க ஐ.எம்.எப் தீர்மானித்துள்ளது
அரச நிறுவனங்களை இயங்க வைப்பது குறித்து ஆராய இன்று விசேட கூட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தில் முழுமையாக மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக அங்குள்ள அனைத்து அரச நிறுவனங்களையும் இயங்க வைப்பது மற்றும் அபிவிருத்தி பணி குறித்தும் ஆராயவென இன்று விசேட கூட்டமொன்று கிளிநொச்சியில் நடைபெறுகிறது.
வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட புதிய அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இடம்பெயர்ந்து சென்றுள்ள மாகாண நிர்வாகத்துக்கு உட்பட்ட அரச உத்தியோகத்தர் களை உடனடியாக கடமைக்கு திரும்புமாறும் ஆளுநர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
மேல் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளை மீண்டும் இயங்க வைப்பதற்கு ஏதுவாக அந்தந்த பாடசாலைகளிலிருந்து இடம்பெயர்ந்து சென்றுள்ள ஆசிரியர்களை மீண்டும் கடமைக்கு திரும்பச் செய்வதற்கென இடம்பெயர்ந்துள்ள ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதும், குடாநாட்டுடன் அவர்கள் தொடர்ந்தும் தொடர்புகளை வைத்திருப்பதற்கு ஏதுவாக யாழ்- கிளிநொச்சி, முல்லைத்தீவு பஸ் சேவைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியையும் ஆளுநர் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
30வருடங்களின் பின் சுதந்திர சிவில் நிர்வாகம்
முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இமெல்டா கூறுகிறார்
வன்னியில் முப்பது வருட காலத்திற்குப் பின்னர் முழுமையான சிவில் நிர்வாகத்தை சுதந்திரமாக நடைமுறைப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்க ளில் மக்கள் மீள்குடியேற்றம் மேற் கொள்ளப்பட்டுள்ள அதேநேரம் சிவில் நிர்வாகம் எதுவிதமான தலையீடுகளுமின்றி முழுமையாகத் தமது கட்டுப்பாட்டின்கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரச அதிபர் கூறினார்.
இதன் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் ஆணித்தரமான இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
இதற்கேற்ப இராணுவத்தினருக்குத் தாம் வழிகாட்டல்களை வழங்குவதாகக் கூறிய அரச அதிபர் அவர்கள், பாதுகாப்புக் கடமைகளை மாத்திரமே மேற்கொள்வதாகக் கூறினார்.
வன்னியில் முன்பு சிவில் நிர்வாகத்தை மேற்கொள்கின்றபோது புலிகள் இடையூறு விளைவித்ததாகக் குறிப்பிட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா புலிகளின் அனுமதிபெற்றே எதனையும் செயற்படுத்த வேண்டுமென வலியுறுத்துவார்கள் என்றும் அவ்வாறு இல்லாவிட்டால், புலி உறுப்பினர்கள் வந்து வீண் தலையீடுகளைச் செய்வார்களென்றும் தெரிவித்தார்.
30 வருடகாலமாக அரச நிர்வாகத்தைப் புலிகள் சீர்குலைத்தார்களென்றும் தனது நிர்வாக செயற்பாட்டுக்கு நெருக்குவாரங்களை ஏற்படுத்தினார்களென்றும் கூறிய அவர், புலிகள் என்னை அச்சுறுத்தவில்லை. ஏனெனில் அரசாங்கம் வழங்கிய உணவுப் பொருள்களிலேயே அவர்கள் தங்கியிருந்தார்கள். அதேநேரம், மக்கள் என்னோடு இருந்தார்கள். அதனால் புலிகள் என்னை அச்சுறுத்தவில்லை என்று குறிப்பிட்டார்.
இதேவேளை, யோகபுரம் தமிழ் மகா வித்தியாலயம் நாளைய தினம் மீண்டும் திறக்கப்படுவதாக அரச அதிபர் கூறினார். மல்லாவி மத்திய கல்லூரியை மீளத் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் 19 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப் பட்டுள்ளனர். நிவாரணக் கிராமங்களிலிருந்து 90% மக்கள் வெளியேறி சொந்த வாழ்விடம் திரும்பியுள்ளனர். அதேபோல் 60% சொந்த இடங்களில் குடியேறியுள்ளதுடன் உறவினர், நண்பர்களின் வீடுகளில் உள்ள மேலும் 40% மக்கள் மீளக் குடியமர உள்ளனர் என்றும் அரச அதிபர் தெரிவித்தார்.
மக்கள் மீள்குடியேறிய பகுதிகளில் சுகாதாரத்துறை, கிராம சேவை அலுவலகம், பிரதேச செயலகம், கல்வித்துறை அலுவலகங்கள் தமது பணிகளை ஆரம்பித்துள்ளன. மக்களின் அன்றாடத் தேவைகளை இலகுவில் நிறைவேற்றிக் கொள்ளும்பொரு ட்டு உள்ளகப் போக்குவரத்துச் சேவைகளை நடத்தவும் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அரச அதிபர் கூறினார்.
இது தொடர்பான விபரங்களை ஜனாதிபதி செயலகத்துக்குப் பெற்றுக்கொடுப்பதாகவும் அவர் குறிப் பிட்டார். பஸ் சேவைகளை மேற்கொள்வது பற்றி யாழ்ப்பாணம் சாலைக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். பஸ் சேவைக்கான பாதுகாப்பு அனுமதியைப் பெற்றுக்கொடுக்க வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
துணுக்காய், மாந்தை கிழக்கு கிளிநொச்சி மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் மேற்குப் பகுதி, ஜயபுரம், பூநகரி, முழங்காவில், நாச்சிக்குடா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் 22ஆம் திகதி மீள் குடியேற்றம் ஆரம்பமாகின.
சிட்னி:நீங்கள் எந்த ஒரு விஷயத்தையுமே "நெகடிவ்' ஆக சிந்திப்பவரா, அப்படியானால் உங்களின் நினைவுத் திறன் அதிகரிக்குமாம். ஆஸ்திரேலியாவில் நடத்திய ஒரு ஆய்வில் தான், இந்த ஆச்சர்யமான விஷயம் தெரிய வந்துள்ளது.
"எந்த ஒரு விஷயத்தையும் எதிர்மறையாக சிந்திப்பது, உடலுக்கும், மனதுக்கும் ஆபத்தை விளைவிக்கும்' என, பலரும் கூறுவது உண்டு. "நல் லதை நினைத்தால், நல்லது நடக்கும்' என்றும் சிலர் கூறுவர். ஆனால், சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள், இதற்கு நேர்மாறான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் பல்கலையின் உளவியல் பேராசிரியர் ஜோசப் போர்காஸ், தனது குழுவினருடன் இணைந்து எதிர்மறையான சிந்தனை, நேர்மறையான சிந்தனைகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தினார். இதில், பல ஆச்சர்யமான விஷயங்கள் தெரியவந்தன.அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒரு விஷயத்தை பற்றி நேர்மறையாக சிந்தித்தால், படைப்பு திறன் அதிகரிக்கும். ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணமும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் அதிகரிக்கும். அதே நேரத்தில் எதிர்மறையாக சிந்தித்தாலும் சில பயன்கள் கிடைக்கும். குறிப்பாக, எதிர்மறையாக சிந்திக்கும் ஒருவர், எந்த விஷயத்திலுமே மிகவும் கவனமாக இருப்பார்.
முன் எச்சரிக்கையான சிந்தனைகளால், வெளி உலகத்தை பற்றிய கவனமும், பிரச்னைகள்ஏற்பட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற தீர்வும் கிடைக்கும். இப்படிப்பட்ட நபர்கள், நெருக்கடியான நேரத்தில் மற்றவர்களால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பும் மிகவும்குறைவாகவே இருக்கும். நினைவுத் திறன் அதிகரிப்பதோடு, மற்றவர்கள் எப்படிப் பட்டவர்கள்என்பதை சரியாக யூகிக்க முடியும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக