28 அக்டோபர், 2009

புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் வவுனியாவில் கைது


மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தோரில் 66 இலங்கையர்கள் விடுதலை

தடுத்து வைக்கப்பட்டிருந்த 66 இலங்கையர்களையும் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் விடுவித்துள்ளனர். விடுவிக்கப்பட்ட அனைவரையும் ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய (யுன்.என்.எச்.சிஆர்)அதிகாரிகளிடம் குடிவரவு அதிகாரிகள் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகின்றது.

இவர்கள் அனைவரும் நாடொன்றுக்கு செல்ல அனுமதிக்கப்படும் வரை, அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இன்று இரு பஸ்களில் ஏற்றி தலைநகர் கோலாலம்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உரிய பயண ஆவணங்கள் இன்றி மலேசியாவில் தங்கியிருந்த 105 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு கடந்த செப்டெம்பர் மாதம் முதல் மலேசியாவின் தென் மாநிலமான ஜொகூரிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து யு.என்.எச்.சி.ஆர். தமக்கு அகதி அந்தஸ்து தர வேண்டுமென கோரி, கடந்த வாரம் முதல் ஆறு பேர் உண்ணாவிரதமிருந்தனர்.இவர்களுள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் மேலும் 21 பேரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில குடிவரவு உதவி பணிப்பாளர் அம்ரன் அஹ்மட் தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்தமைக்காக யு.என்.எச்.சி.ஆரின் வெளிவிவகார உறவுகளுக்கான அதிகாரி ஜன்ரே இஸ்மாயில் மலேசிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனையோரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் தாம் மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்

பாதுகாப்புப் பிரிவினருக்கு உளவுத் தகவல்களை வழங்கும் போர்வையில் மறைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதாக தெரிவித்து பொலிசாருடன் இணைந்து செயற்பட்ட இந்நபர், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய சகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிவனேசராஜா வினோத்குமார் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக் கடற்படையினர், இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கைகளில் குறித்த நபர் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்த குறித்த நபர் தாமாகவே புலிகள் பற்றிய தகவல்களை வழங்குவதாக தெரிவித்துப் பொலிஸாரிடம் சரணடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இவர் வழங்கிய உளவுத் தகவல்கள் போலியானவை எனப் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சிங்களவர் ஒருவரைப் போன்று நடித்து இவர் தெற்கில் தகவல்களைத் திரட்டியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக