28 அக்டோபர், 2009

ஏ9 பாதையின் ஊடான அம்புலன்ஸ் சேவைகள் இன்றுமுதல் ஆரம்பம்-
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதிருந்தால் பிரபாகரன் இன்னும் உயிருடன்தான் இருந்திருப்பாரென அமைச்சர் டிலான் பெரேரா தெரிவிப்பு-

தொழிற்சங்க போராட்டம் என்ற பெயரில் ஜே.வி.பியானது அரசியல் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறதென அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையானது இந்த நாட்டில் இல்லாதிருந்திருந்தால் பிரபாகரன் இன்னும் உயிருடன்தான் இருந்திருப்பார். 2004ம் ஆண்டில் பதவியில் இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பல அமைச்சுக்களை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின்கீழ் பெற்றுக்கொண்டார். அவ்வாறு செயற்பட்டிருக்காவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சிபீடத்தில் இருந்திருக்கும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை காரணமாக யுத்தத்தின்போது வெற்றிகரமான தீர்மானங்களை செயற்படுத்த முடிந்தது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் குறைபாடுகள் இருக்குமாயின் அவற்றைத் திருத்திக் கொள்ளவேண்டும். இதற்காக புத்திஜீவிகளின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.9 பாதையின் ஊடான அம்புலன்ஸ் போக்குவரத்து சேவைகள் இன்றுமுதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நோயாளர்களை யாழ்ப்பாணத்திலிருந்து தீவிர சிகிச்சைகளுக்காக கொழும்பு உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு தரைவழியின் ஊடாக அழைத்துவர முடிந்துள்ளது. இந்த சேவையின் முதற்கட்டமாக சென்ற். ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஒருதொகுதி நோயாளர்கள் இன்று அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக