5 அக்டோபர், 2009



மனிக்பாம் ஸோன் 3 முகாமில் சுமார் 2000 பேர் விசேட தேவைக்கு உட்பட்டோர் எனத் தகவல்
அக்கரைப்பற்று இடைத்தங்கல் முகாம் இன்று மாலையுடன் மூடப்பட்டுள்ளது





இடைத்தங்கல் முகாம்களிலிருந்து மீள் குடியேற்றத்திற்காக அம்பாறை மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அக்கரைப்பற்று இடைத்தங்கல் முகாம் இன்று மாலையுடன் மூடப்பட்டுள்ளது.

இறுதியாக அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேரும்இன்று மாலை விடுவிக்கப்பட்டு சிவில் அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு இருப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 11 ஆம் திகதி அம்பாறை மாவட்டததைச் சேர்ந்த 42 குடும்பங்களைக் கொண்ட 130 பேர் விடுவிக்கப்பட்டு சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு அம்பாறை மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு குறித்த இடைத் தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 23 ஆம் திகதி முதல் இக் குடும்பங்கள் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கத



மனிக்பாம் இடைத்தங்கல் முகாமின் ஸோன் 3 முகாமில் மாத்திரம் 2000 பேர் விசேட தேவைக்குட்பட்டோராக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

முகாம்களில் உள்ளவர்களின் விபரங்கள் அடங்கிய கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் இது அறிய வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தச் சூழ்நிலையில் காயமடைந்து அங்கங்களை இழந்தவர்கள், கண்பார்வை இழந்தவர்கள், வாய்பேச முடியாமலும், காது கேளாத நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் மற்றும் இயற்கையிலேயே வலது குறைந்தவர்கள் போன்றோர் இந்த எண்ணிக்கையில் அடங்குவதாகத் தெரிகின்றது.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தது மட்டுமன்றி, நேரடி தாக்கங்களுக்கு உள்ளாகி உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்கான நடவடிக்கைகளுக்காகவே இந்தத் தகவல்கள் சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக