24 ஜனவரி, 2011

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொது இணக்கப்பாட்டுடன் போட்டியிட ஐ.ம.சுதந்திர முன்னணி கட்சிகள் முடிவு

உள்ளூராட்சித் தேர்தலில் பொது இணக்கப்பாட்டுடன் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் நேற்று தீர்மானித்ததாக பிரதமர் தி.மு. ஜயரட்ன தெரி வித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டம் பிரதமர் தி.மு.க. ஜயரட்னவின் தலைமையில் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றது. தேர்தல் ஆணையாளர் கடந்த 20ம் திகதி முதல் 301 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதாக கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இம்முறை இளம் வேட்பாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. இதனையடுத்து உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிக எண்ணி க்கையானோர் முன் வந்துள்ளனர்.

இவ்வாறு தேர்தலில் போட்டி யிடும் விருப்பத்துடன் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்துக்கு விண்ணப்பித்திருந்தனர். எனினும் சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புத்திக்கூர்மையுள்ள, ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாத தகுதிகளை உடையவர்களுக்கு மட்டுமே வேட்பாளர்களாக தெரிவு செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.

தற்போது பாராளுமன்றத்தில் அல்லது உள்ளூராட்சி சபைகளில் பிரதிநிதித்துவம் செய்பவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட அனு மதி வழங்குவதில்லை என்று வேட்பு மனு தொடர்பான தேசிய கமிட்டி தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசிய கமிட்டியொன்றை நியமித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக