24 ஜனவரி, 2011

இந்திய மீனவர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு இலங்கை கடற்படை பேச்சாளர் அத்துல செனரத்


இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அத்துல செனரத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இலங்கை- இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“அவ்வாறான சம்பவங்கள் எவற்றுடனும் கடற்படையினர் தொடர்புபடவில்லையெனத் தினகரனுக்குத் தெரிவித்த கெப்டன் செனரத், இக்குற்றச்சாட்டுக்கள் ஆதார மற்றவை என்றும் கூறினார். பிரச்சினைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக சில தீய சக்திகளால் காலத்துக்குக் காலம் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும், இலங்கைக் கடற்படைக்கும் இந்தியக் கடற்படைக்கும் இடையில் பிரச்சினையைத் தோற்றுவி ப்பதற்கே இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கைக் கடற்படையினர் மீது கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகள் மேற்கொண்டிருந்த போதும் அவற்றில் எந்தவிதமான உண்மைகளும் இல்லையெ ன்றும் கடற்படைப் பேச்சாளர் கப்டன் அதுல செனரத் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக